தமிழக மாநிலப் பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (16.05.2025) காலை வெளியானது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அதிகாரப்பூர்வமாக இந்த முடிவுகளை அறிவித்தார்.
மொத்தம் தேர்வெழுதிய 8,07,098 மாணவர்களில் 7,43,232 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 92.09% ஆக பதிவாகியுள்ளது.
இந்த முறையும் மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வெழுதிய 4,24,610 மாணவிகளில் 4,03,949 பேர் தேர்ச்சி பெற்று 95.13% என்ற உயர்வான தேர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளனர். அதே நேரத்தில், தேர்வெழுதிய 3,82,488 மாணவர்களில் 3,39,283 பேர் தேர்ச்சி பெற்று 88.70% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். இதன்மூலம், மாணவர்களை விட 6.43% அதிக தேர்ச்சி விகிதத்துடன் மாணவிகள் முன்னிலை வகிக்கின்றனர்.
பாட வாரியாக முழு மதிப்பெண் பெற்றவர்கள்:
தமிழ் - 41
ஆங்கிலம் - 39
இயற்பியல் - 390
வேதியியல் - 593
உயிரியல் - 91
கணிதம் - 1338
தாவரவியல் - 4
விலங்கியல் - 2
கணினி அறிவியல் - 3,535
வரலாறு - 35
வணிகவியல் - 806
கணக்குப் பதிவியல் - 111
பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்:
அரசுப் பள்ளி - 87.34% (தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது)
அரசு உதவிபெறும் பள்ளி - 93.09%
தனியார் சுயநிதிப் பள்ளிகள் - 98.03%
பிரிவு வாரியாக தேர்ச்சி விகிதம்:
அறிவியல் பாடப் பிரிவு - 95.08%
வணிகவியல் பாடப் பிரிவு - 87.33%
கலைப் பிரிவு - 77.94%
தொழிற்பாடப் பிரிவு - 78.31%
தேர்வு முடிவுகளை மாணவர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் பின்வரும் இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்:
www.tnresults.nic.in
www.dge.tn.gov.in
https://tnresults.nic.in
மேலும், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களின் கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு அவர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.