Tamil Nadu Plus One Result 2023 Live – 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியாகின.
தேர்வு எழுதிய மாணவர்கள் tnresults.nic.in அல்லது dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்கள் முடிவுகளைப் பார்க்கலாம்.
தமிழகத்தில் 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 4,000 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு, ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 90.07 ஆக இருந்தது.
இதில், மாணவிகள் 94.99 சதவீதம், மானவர்கள் 84.86 சதவீத தேர்ச்சியும் பெற்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், கடந்த ஆண்டு 90.07% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தேர்ச்சி விகிதம் 0.86% அதிகரித்துள்ளது.
ராணிப்பேட்டை ( 82.58 %)
மயிலாடுதுறை (83.70 % )
திருவண்ணாமலை (84.00 %)
விழுப்புரம் (84.51 % )
நாகப்பட்டிணம் (85.03 % )
இயற்பியல் – 440
வேதியியல் – 107
உயிரியல் – 65
தாவரவியல் – 15
விலங்கியல் – 34
அரசுப்பள்ளிகள் : 84.97%
தனியார் பள்ளிகள் : 93.20%
மாணவிகள் : 94.36%
மாணவர்கள் : 86.99%
மாணவர்களை விட மாணவிகள் 7.37% அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 9 பேர், ஆங்கிலத்தில் 13 பேரும், கணிதத்தில் 17 பேரும் 100க்கு 100 எடுத்து சாதனை படைத்துள்ளனர்,
தேர்ச்சி விகிதத்தில் முதல் 5 இடங்கள் பெற்ற மாவட்டங்கள்
திருப்பூர் – 96.38%
ஈரோடு – 96.18%
கோவை – 95.73%
நாமக்கல் – 95.60%
தூத்துக்குடி – 95.43%
தமிழகத்தில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா முடிவுகளை வெளியிட்டார்
11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், கடந்த ஆண்டு 90.07% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தேர்ச்சி விகிதம் 0.86% அதிகரித்துள்ளது.
படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் – tnresults.nic.in
படி 2: முகப்புப்பக்கத்தில் ஒளிரும் Intermediate exam result கிளிக் செய்யவும்
படி 3: உங்கள் ரோல் எண்ணை உள்ளிடவும்
படி 4: உங்கள் மதிப்பெண்கள் காட்டப்படும்
மாணவர்கள் 11 ஆம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அதிகாரப்பூர்வ வலைத்தளமான — tnresults.nic.in இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இதைப் பயன்படுத்தி அடுத்த வகுப்பில் சேரலாம். அசல் மதிப்பெண் பட்டியல்களை உரிய நேரத்தில் பள்ளிகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
படி 1: tnresults.nic.in அல்லது dge.tn.gov.in. என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
படி 2: இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ரிசல்ட் லிங்கை கிளிக் செய்யவும்
படி 3: ரோல் எண் மற்றும் பிறந்த தேதி போன்ற உங்கள் சான்றுகளை உள்ளிடவும்
படி 4: எதிர்கால குறிப்புக்காக முடிவுகளைப் பார்த்து பதிவிறக்கவும்
தமிழ்நாடு வாரியம் 2018 ஆம் ஆண்டில் 11 ஆம் வகுப்புக்கு தடையில்லாக் கொள்கையை ஏற்றுக்கொண்டது. இது தேர்வில் தேர்ச்சி பெற முடியாத மாணவர் பின்னர் 12 ஆம் வகுப்பில் எழுதுவதற்கு உதவுகிறது.
தமிழ்நாடு வாரியம் 2018 ஆம் ஆண்டு 11 ஆம் வகுப்புக்கு தடையில்லாக் கொள்கையை ஏற்றுக்கொண்டது. இது தேர்வில் தேர்ச்சி பெற முடியாத மாணவர் பின்னர் 12 ஆம் வகுப்பில் அதை எடுக்க உதவுகிறது. எனவே துணைத் தேர்வுகள் இருக்காது.
11ம் வகுப்பு பொதுத்தேர்வு கிட்டத்தட்ட 4,000 மையங்களில் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு, ஜூன் 27ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 90.07 ஆக இருந்தது. மாணவிகள் 94.99 சதவீத தேர்ச்சியுடன் ஆண்களை விடவும், சிறுவர்கள் 84.86 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர். 2022ல் மொத்தம் 7,50,856 மாணவர்கள் தேர்வெழுதினர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச்.14ம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.
மொழிப் பாடங்களுக்கான தேர்வினை எழுதுவதற்கு 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 7 லட்சத்து 75 ஆயிரத்து 404 பேர் இன்று தேர்வு எழுதினர். 12,660 மாணவர்கள் தேர்விற்கு வரவில்லை. மாணவர்கள் தேர்வு எழுத வராமல் இருந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்.5-ம் தேதி வரை நடத்தப்பட்டது. விடைத்தாள்களை திருத்தும் பணிகள் ஏப்.15-ல் தொடங்கி மே 4-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் முடிக்கப்பட்டு விட்டன.
இந்நிலையில், 11-ம் வகுப்பு முடிவுகள் மதியம் 2 மணிக்கும் வெளியாகும். இந்த தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in, http://www.dge.tn.gov.in இணையதள முகவரிகள் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், தாங்கள்படித்த பள்ளிகள் மூலமும் அறியலாம்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பப்படும்.
இன்று பிற்பகல் 2 மணிக்கு 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.