2023 கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 8) வெளியாகின்றன. தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதியுள்ளனர்.
மாணவ, மாணவியர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.gov..in ஆகிய இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக முடிவுகள் அனுப்பி வைக்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே 12 ஆம் பொதுத் தேர்வு முடிவுகள் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுவார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆகியுள்ளது. இதனால் தேர்வு எழுதியிருக்கும் மாணவர்கள் அனைவரும் அதிக குழப்பத்துடன் காணப்படுகின்றனர்.
அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை திருச்சியில் சில நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அவசரமாக சென்னைக்கு கிளம்பி வந்தார். அவர் வர சற்று தாமதமானதால் ரிசல்ட் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.