தேர்வில் தேர்ச்சி பெறாத 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 104 என்ற ஹெல்ப்லைன் மூலம் உளவியல் ஆலோசனையை சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது.
சுகாதார செயலாளர் ககன்தீப் சிங் பேடி திங்கள்கிழமை கால் சென்டருக்குச் சென்று ஆலோசனைக் குழுவுடன் கலந்துரையாடினார்.
104 ஹெல்ப்லைன் மற்றும் TeleMANAS 14416 (நட்புடன் உங்களோடு மன நல சேவை) கால் சென்டர் மூலம், 30 உதவி மையங்கள் மற்றும் சுகாதாரத் துறையின் 100 ஆலோசகர்களின் ஆதரவுடன் ஆலோசனை சேவைகள் வழங்கப்படுகின்றன.
ஆலோசனையின் மூலம் கண்டறியப்பட்ட அதிக ஆபத்துள்ள மாணவர்கள், மேலதிக ஆலோசனை மற்றும் பின்தொடர்தலுக்காக மனநல மருத்துவர், உளவியலாளர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள் அடங்கிய மாவட்டக் குழுவிற்கு அனுப்பப்படுவார்கள்.
2023-2024 ஆம் ஆண்டில், தேர்வெழுதிய 7.6 லட்சம் மாணவர்களில், மொத்தம் 51,919 பேர் (32,164 ஆண்கள் மற்றும் 19,755 பெண்கள்) தேர்ச்சி பெறவில்லை. இதற்கான பட்டியல், கவுன்சிலிங்கிற்காக, துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“