Advertisment

TN 12th Result 2024: 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி; மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

TN HSE +2 Result 2024 Live: பிளஸ் டூ ரிசல்ட் இன்று (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளளது. பதிவு எண், பிறந்த தேதி கொடுத்து ஆன்லைனில் முடிவுகளைதெரிந்துக் கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hsc result live

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

TN +2 Result 2024 Live| : 12th Exam Mark | Hsc Exam | Exam Result: தமிழகத்தில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. 

Advertisment

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் (DGE) மே 6 ஆம் தேதி (காலை 9:30 மணி) 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அறிவிக்கிறது. இந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in இணையதளங்களில் வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவை ரோல் எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

ஆங்கிலத்தில் படிக்க: TN 12th Result 2024 Live Updates: TNDGE to announce Tamil Nadu +2 HSE results on May 6

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22 வரை நடத்தப்பட்டன, சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதியுள்ளனர். மேலும் முக்கிய பாடங்களின் தேர்வுக்கு முன்னதாக மூன்று முதல் ஐந்து நாட்கள் இடைவெளி வழங்கப்படும் வகையில் அமைக்கப்பட்டது, இதனால் மாணவர்கள் தயார் செய்ய போதுமான நேரம் கிடைத்தது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து கடந்த ஆண்டு அறிவியல், கலை மற்றும் வணிகவியல் பாடங்களில் 12 ஆம் வகுப்பு தேர்வில் சுமார் 8.51 லட்சம் மாணவர்கள் எழுதினர். கடந்த ஆண்டு 94.03 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம், 2022ல் 93.80 சதவீதமாக இருந்தது. இதற்கிடையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 10 ஆம் தேதி அறிவிக்கப்படும். 10 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 8 வரை நடத்தப்பட்டது மற்றும் செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 26 முதல் 28 வரை நடைபெற்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • May 06, 2024 12:42 IST
    அரசு பள்ளிகள் அசத்தல் 

     

    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 397 அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் 100% தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். 

     



  • May 06, 2024 11:58 IST
    பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

    பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது. இன்று முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஜூலை 10 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியாகிறது. 



  • May 06, 2024 11:06 IST
     100க்கு 100பெற்றவர்கள் எத்தனை பேர்? 

    இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வில் 26,352 மாணவர்கள் ஒரு பாடத்தில்  100க்கு 100பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு tnresults.nic.in இணையதளத்தில் வெளியானது. 



  • May 06, 2024 11:01 IST
    தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது?

    12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9ஆம் தேதி வழங்கப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு 



  • May 06, 2024 10:58 IST
    பொறியியல் படிப்பு: ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

    பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.  இன்று முதல் ஜூன் மாதம் 6ம் தேதி வரை விண்ணப்பப் பதிவு செய்யலாம்.  ஜூன் 12ம் தேதி வரை சான்றிதழ்கள் அப்லோடு செய்ய அவகாசம்.  ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.  ஜூன் 12ம் தேதி ரேண்டம் நம்பர் வெளியிடப்படும்.  சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13ம் தேதி தொடங்கி ஜூன் 30ம் தேதி வரை நடைபெறும்.



  • May 06, 2024 10:55 IST
    397 அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சி

    12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள 397 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இந்த 397 பள்ளிகளில் எந்த மாணவர்களும் தோல்வி அடையவில்லை.



  • May 06, 2024 10:48 IST
    தமிழ்நாடு அசத்தல்

    12-ம்  வகுப்பு  பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி பெற்று அசத்தல். 97.45% தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்.



  • May 06, 2024 10:36 IST
    7,19,196 மாணவர்கள் தேர்ச்சி

    பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 7,19,196 மாணவர்கள் தேர்ச்சி

    3,93,890 மாணவிகளும், 3,25,305 மாணவர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி

    மாணவர்களைவிட 4.07 சதவீதம் மாணவியர் அதிகம் தேர்ச்சி



  • May 06, 2024 10:22 IST
    அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம்

    அரசு பள்ளிகள்: 91.32 சதவீதம்
    அரசு உதவி பெறும் பள்ளிகள்: 95.49 சதவீதம்
    தனியார் பள்ளிகள்: 96.7 சதவீதம்
    பெண்கள் மட்டும் பள்ளிகள்: 96.39 சதவீதம்
    Co-education பள்ளிகள்: 94.7 சதவீதம் 



  • May 06, 2024 10:20 IST
    தேர்ச்சி விகிதம்: திருப்பூர் முதலிடம்

    12-ம்  வகுப்பு  பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியானது. +2 தேர்வு முடிவுகளில் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி. 97.45% தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம். 90.47%  தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடம். 



  • May 06, 2024 10:11 IST
    தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது? 

    தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது? 

    1. tnresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். 
    2. ஹோம்பேஜ் பக்கத்தில்  ‘TN HSE(+2) Result 2024’ கிளிக் செய்யவும். 
    3. உங்கள் பிறந்த தேதி மற்றும் தேர்வு பதிவு எண்ணை உள்ளிடவும். 
    4.  ‘Get Marks’ என்பதை கொடுக்கவும்.
    5.  Submit  கொடுத்து டவுன்லோடு கொடுக்கவும்.



  • May 06, 2024 10:06 IST
    மறுதேர்வு தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும்

    +2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான உடனடி மறுதேர்வு தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிப்பு. தமிழ்நாட்டில் 12-ம்  வகுப்பு  பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டது.



  • May 06, 2024 09:50 IST
    மொத்த தேர்ச்சி விகிதம்  94.56%


    12-ம்  வகுப்பு  பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு  tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்த தேர்ச்சி விகிதம்  94.56% ஆகும். 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்கள் 92.37%, பெண்கள் 96.44% 



  • May 06, 2024 09:34 IST
    +2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

    12 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு. dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in என்ற இணைய தளங்கள் வாயிலாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறியலாம்



  • May 06, 2024 09:29 IST
    +2 தேர்வு முடிவுகள்: அன்பில் மகேஷ் வாழ்த்து

    தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையை மதிப்பீடு செய்வதற்கானது அல்ல. இன்னும் சற்று நேரத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ். 



  • May 06, 2024 09:11 IST
    தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரம் 

    தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் இன்னும் சற்று நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது. 
    tnresults.nic.in இணையதளத்தில்  6 மே 2024 திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு முடிவுகளை வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் கூறியுள்ளது. 



  • May 06, 2024 08:49 IST
    மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்போது? 

    தேர்வு முடிவுகளில் திருப்தி அடையாத மாணவர்கள், மதிப்பெண்ணில் சந்தேகம் இருக்கும் மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்கும் முறை குறித்து இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் போது அறிவிப்பு வெளியிடப்படும். 



  • May 06, 2024 08:40 IST
    மதிப்பெண் பட்டியல் எப்போது வெளியிடப்படும்?

    தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது.tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in இணையதளங்களில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதைத் தொடர்ந்து மதிப்பெண் பட்டியலை (marksheets ) பள்ளிக் கல்வித் துறை விரைவில் வெளியிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். 



  • May 06, 2024 08:30 IST
    முடிவுகளை எப்படி அறிவது?

    அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதி பதிவிட்டு முடிவுகளை அறியலாம். 

    tnhsc.webp



  • May 06, 2024 07:54 IST
    ஆன்லைனில் +2 தேர்வு முடிவு எப்படி பார்ப்பது? 

    Step 1: dge.tn.gov.in or tnresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். 
    Step 2:  ஹோம்பேஜ் பக்கத்தில் result  டேப் கிளிக் செய்யவும். 
    Step 3: உங்கள் பிறந்த தேதி மற்றும் தேர்வு பதிவு எண்ணை உள்ளிடவும். 
    Step 4: தேர்வு முடிவுகள் காண்பிக்கப்படும். 
    Step 5: இந்த முடிவுகளை Save செய்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். 



  • May 06, 2024 07:44 IST
    கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 

    தேர்ச்சி விகிதத்தில் கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் இருந்தது. அதிக தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள் இவை:

    விருதுநகர்: 97.85% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்
    திருப்பூர் : 97.79%  தேர்ச்சி 
    பெரம்பலூர்: 97.59%  தேர்ச்சி 
    அரியலூர்: 97.59% தேர்ச்சி 
    கோவை: 97.57%  தேர்ச்சி 



  • May 06, 2024 07:37 IST
    8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்

    கடந்த மார்ச் 1-ம் தேதி பிளஸ் 2  பொதுத் தேர்வு தொடங்கியது. 22ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்ற நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 7.8 லட்சம் மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இணையதளம் மூலம் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். அதோடு பள்ளியில்  பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.



  • May 06, 2024 07:29 IST
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு 

    தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in உள்ளிட்ட இணையதங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம். 



  • May 05, 2024 21:48 IST
    கடந்த 5 ஆண்டுகளில் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை சரிவு

    கடந்த ஐந்து ஆண்டுகளில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. 2019 இல், இந்த எண்ணிக்கை 8,42,512 ஆக இருந்தது. 2020ல் 7,79,931 மாணவர்களும், 2021ல் 8,16,473 மாணவர்களும், 2022ல் 8,06,277 மாணவர்களும், இறுதியாக 2023ல் 8,03,385 மாணவர்களும் என அடுத்தடுத்த ஆண்டுகளில் கீழ்நோக்கிய போக்கைக் கண்டது.



  • May 05, 2024 21:34 IST
    +2 முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்கள் கவனிக்க வேண்டியவை

    பொதுத் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் தமிழக மாணவர்கள் இந்த குறிப்புகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்:

    1. அதிகாரப்பூர்வ இணையதளங்களில் உள்நுழைய பதிவு எண்/ரோல் எண்ணுடன் தயாராக இருங்கள்

    2. முடிவுகளை அணுகக்கூடிய இணையதளங்கள் - tnresults.nic.in, dge.tn.gov.in, dge1.tn.nic.in,

    3. முடிவைப் பதிவிறக்கம் செய்து, எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்



Exam Result 12th Exam Mark Hsc Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment