Tamil Nadu Plus 2 Result 2023: 12ம் வகுப்பு தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகின.
தமிழகத்தில் 12ம் வகுப்புத் தேர்வுகள், மார்ச் 3ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 3ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற்றது. 8.8 லட்சம் மாணவர்கள் 3,169 தேர்வு மையங்களில் இத்தேர்வை எழுதியுள்ளனர். மேலும் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின.
https://tnresults.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை காண முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
அனைவருக்கும் வாழ்த்துகள், இந்தமுறை தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர வேண்டாம்; வெற்றிக்கு இன்னும் ஒரு அடிதான்; நீங்களும் விரைவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்- மு.க.ஸ்டாலின் ட்வீட்
விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு வரும் நாளை (மே 9) காலை 11 மணி முதல் 13ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்- அரசு தேர்வுகள்துறை அறிவிப்பு
12ம் வகுப்பு பொதுதேர்வில், தேர்ச்சிபெற்ற மாணவச் செல்வங்களுக்கு நல்வாழ்த்துகள்; தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ள மாணவிகள் நந்தினி மற்றும் லக்ஷ்ய ஸ்ரீ ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் – வி.கே.சசிகலா ட்வீட்
திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ் , ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், ஆகிய பாடங்களில் 600 க்கு 600 மதிப்பெண் பெற்றுள்ளார்
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்;
தேர்வில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்கள் அதற்காக மனம் தளர வேண்டாம். அடுத்தடுத்த வாய்ப்புகளில் வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது- டிடிவி தினகரன் ட்வீட்
கரூர் மாவட்டத்தில் 4768 மாணவர்களும், 5436 மாணவிகள் என மொத்தம் 10,204 பேர் தேர்வு எழுதினர். இதில் 4385 மாணவர்கள், 5238 மாணவிகள் என மொத்தம் 9623 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 91.97 சதவீதம், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.36 சதவீதம் ஆகும்
சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு 17 37,261 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதிய நிலையில், 16,300 மாணவர்கள், 18,809 மாணவிகள் என மொத்தம் 35,109 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகளை பொறுத்தவரை 19,190 மாணவர்கள் தேர்வு எழுதி நிலையில், 17,572 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை – 29,679
மாணவர்கள்- 13,520
மாணவிகள்- 16,159
மொத்தம் தேர்ச்சி சதவீதம் – 96.02
+ 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள். – 1,231
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 114 பள்ளியை சேர்ந்த 14680 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்ச்சி பெற்றவர்கள் 12939. தேர்ச்சி விகிதம் 88.14
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 19 ஆம் தேதி துணைத் தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகள்- 89.80%
அரசு உதவி பெறும் பள்ளிகள்- 95.99%
தனியார் பள்ளிகள்- 99.08%
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே மூன்றாம் பாலினத்தவரும் தேர்ச்சி பெற்றார்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே 2 பேர் மட்டும் தமிழ் மொழியில் முழு மதிப்பெண் எடுத்துள்ளனர்.
அறிவியல் பாடப்பிரிவுகளில் 96.32 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வணிகவியல் பாடப் பிரிவுகளில் 91.63% தேர்ச்சி. கலைப் பிரிவுகளில் 81.89%, தொழிற்பாடப் பிரிவுகளில் 81.11 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இயற்பியல் – 812, வேதியியல் – 3,909, உயிரியல் – 1494, தாவரவியல் – 340, விலங்கியல்- 154 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 7,55,451 – 94.03%. மாணவியர் 4,05,753 (96.38%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,49,697 (91.45%) தேர்ச்சி அடைந்துள்ளனர் ., மூன்றாம் பாலினத்தவர் 1 (100.00%) தேர்ச்சி . இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்
அதிகபட்சமாக கணக்கு பதிவியலில் 6, 573 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணினி அறிவியல் 4, 618, வணிகவியல் – 5678, பொருளியல் – 1706 100க்கு 100 பேர் எடுத்துள்ளனர்.
தேர்ச்சி விகிதத்தில் முதல் இரண்டு இடங்கள் விருதுநகர், திருப்பூர் பெற்றுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடம் பெற்றுள்ளது.
12ம் வகுப்பு தேர்வு : 94.03 % மாணவர்கள் தேர்ச்சி . மாணவர்கள் 91.45 %, மாணவிகள் 96.38 % தேர்ச்சி.
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 9.30 மணிக்கு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் முடிவுகள் வெளியாவதில் தாமதமாகிறது. அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதால் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும், இணையதளத்தில் புதுச்சேரி முடிவுகளும் வெளியாகும்.
சற்று நேரத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அவர் தேர்வு முடிவுகளை முழுவதுமாக வெளியிடுவார். அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு, சற்று நேரத்தில் அன்பில் மகேஷ் வர உள்ளார்.
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு இன்று துவங்குகிறது . 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாக உள்ள நிலையில் உடனடி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடங்க உள்ளது .
தேர்வு முடிவுகளை http://tnresults.tn.nic.in, http://dge.tn.gov.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும் தெரிந்து கொள்ளலாம்
தமிழகத்தில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. தேர்வு முடிவுகளை, உடனடியாக மாணவர்களின் செல்போன் எண்களுக்கு அனுப்ப ஏற்பாடு .