தமிழகத்தில் 2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு அட்டவணையை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
அதன்படி, 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதேபோல், 11 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி 21- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
2024 - 2025ம் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை
03.03.2025 - திங்கள்கிழமை - தமிழ் மற்றும் இதர மொழிப்படாங்கள்
06.03.2025 - வியாழக்கிழமை - ஆங்கிலம்
11.03.2025 - செவ்வாய்க்கிழமை - கணிதம், விலங்கியல், வர்த்தகம், மைக்ரோ உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல்ஸ் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது)
14.03.2025 - வெள்ளிக்கிழமை - கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழில்முறை), அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
18.03.2025 - செவ்வாய்க்கிழமை - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்
21.03.2025 - வெள்ளிக்கிழமை - வேதியியல், கணக்கு, புவியியல்
25.03.2025 - செவ்வாய்க்கிழமை - இயற்பியல், பொருளாதாரம், வேலை வாய்ப்பு திறன்கள்.
2024 - 2025ம் கல்வியாண்டிற்கான 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
05.03.2025 - புதன்கிழமை - தமிழ் மற்றும் இதர மொழிப்படாங்கள்
10.03.2025 - திங்கள்கிழமை - ஆங்கிலம்
13.03.2025 - வியாழக்கிழமை - கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழில்முறை), அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
17.03.2025 - திங்கள்கிழமை - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்
20.03.2025 - வியாழக்கிழமை - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்
24.03.2025 - திங்கள்கிழமை - கணிதம், விலங்கியல், வர்த்தகம், மைக்ரோ உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல்ஸ் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது)
27.03.2025 - வியாழக்கிழமை - வேதியியல், கணக்கு, புவியியல்.
2024 - 2025ம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை
28 - 03 - 2025 - வெள்ளிக்கிழமை - தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்கள்
02 - 04 - 2025 - புதன்கிழமை - ஆங்கிலம்
04 - 04 - 2025 - வெள்ளிக்கிழமை - விருப்ப மொழிப் பாடம்
07 - 04 - 2025 - திங்கள்கிழமை - கணிதம்
11 - 04 - 2024 - வெள்ளிக்கிழமை - அறிவியல்
15 - 04 - 2025 - வியாழக்கிழமை - சமூக அறிவியல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.