தமிழ்நாட்டில் ரூ.7,375 கோடி மதிப்பிலானதொழில் முதலீடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், வேலூர், தூத்துக்குடி, திருச்சி, பெரம்பலூர் இந்த தொழிற்சாலைகள் அமைய உள்ளது. இதன் மூலம் சுமார் 19,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை (பிப்ரவரி 10) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் ரூ.7,375 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலமாக வேலூர், தூத்துக்குடி, திருச்சி, பெரம்பலூர் ஆகிய நகரங்களில் தொழிற்சாலைகள் அமையும் எனவும் 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் 86 ஆயிரம் மக்களுக்குப் பட்டா வழங்க ஒப்புதல் வழங்கி ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் 'பெல்ட் ஏரியாக்களில்' ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்துவரும் 29,187 பேர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.