Advertisment

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு; பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு; 90.07% மாணவர்கள் தேர்ச்சி; பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

author-image
WebDesk
New Update
public exam, 12th public exam, 10th public exam, 11th public exam, tamil nadu, guidelines

TN class 11th results released Perambalur secured top: தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

Advertisment

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இந்த பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 27) வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: TN 11th Result 2022: 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: ‘செக்’ செய்வது எப்படி?

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் http://www.tnresults.nic.inhttp://www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். தேர்வர்கள் இந்த இணையதளங்களில் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தமிழகம் முழுவதும் 90.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 94.99% மற்றும் மாணவர்கள் 84.86% என்ற அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 1 தேர்வு முடிவுகளில் மாநில அளவில் 95.56% தேர்ச்சி விகிதம் பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 95.44% பெற்று விருதுநகர் மாவட்டம் 2வது இடமும், 95.25% பெற்று மதுரை மதுரை மூன்றாம் இடமும் பிடித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே பிளஸ் 1 பொதுத்தேர்வை 41,376 மாணவர்கள் எழுதவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

School Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment