Advertisment

143 அரசு கலைக் கல்லூரிகளில் ஆன்லைன் அட்மிஷன்: 1 லட்சம் மாணவர்களை சேர்க்க ஏற்பாடு

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, அரசு கல்லூரிக் கல்வி இயக்குநரகம் கடந்த ஆண்டு போலவே 143 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நிறைவு பெற்றது பொறியியல் கலந்தாய்வு : 100 கல்லூரிகளில் 20% இடங்கள் கூட நிரம்பவில்லை!

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் பரவலைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்குநரகம் கடந்த ஆண்டு போலவே 143 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்த திட்டமிட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

கொரோனா வைரஸ் தொற்றுநோய் 2வது அலை பரவல் காரணமாக இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க குழு அமைக்கப்பட்டு மதிப்பெண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதனால், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது எப்படி நடைபெறும் என்ற எதிர்ப்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் கடந்த ஆண்டு போலவே 143 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குனரகம், ஆன்லைன் மாணவர் சேர்க்கைக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள், மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள், பிரபலமான படிப்புகள் மற்றும் அனைத்து கல்லூரிகளிலிருந்தும் குறைவான சேர்க்கைகளைக் கொண்ட படிப்புகள் போன்ற விவரங்களை இயக்குநரகம் சேகரித்துள்ளது.

சிபிஎஸ்இ மற்றும் மாநில கல்வி வாரியம் 12ம் வகுப்பு முடிவுகளை அறிவித்த பின்னர் ஆகஸ்ட் 1 முதல் இளங்கலை படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 2021-22 கல்வி ஆண்டிற்கு அனுமதிக்கப்பட்ட புதிய கல்லூரிகள் மற்றும் படிப்புகள் போன்ற விவரங்களை கல்லூரிக் கல்வி இயக்குனரகம் வலைத்தளத்தில் புதுப்பித்து வருகிறது. ஆன்லைன் விண்ணப்பங்கள் நிரப்புவதற்கு மிகவும் எளிதாக இருக்கும் என்றும் மாணவர்கள் தங்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்தியே அந்த விவரங்களை நிரப்ப முடியும்” என்று வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆண்டைப் போலவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களுக்கு உதவ ஒரு உதவி மையம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளில் 89,000 இடங்களுக்கு சுமார் 3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்கைக்கு அரசு கலந்தாய்வு நடத்தும். எனவே, இந்த ஆண்டு சுமார் 17,000 கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாணவர் எத்தனை கல்லூரிகளுக்கு வேண்டுமானாலும் எத்தனை படிப்புகளுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அதற்கு மாணவர்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் செயலாக்கக் கட்டணம் (Processing Fee) செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கைக் குழு ஒவ்வொரு பாடத்திற்குமான விண்ணப்பங்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அனுப்பும். அந்த விண்ணப்பங்களின் விவரங்களைக் கொண்டு 69% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்லூரி சேர்க்கைக் குழு தரவரிசைப் பட்டியலைத் தயாரிக்கும். தேர்வு பட்டியல் குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். பின்னர், சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் மாணவர்கள் கல்லூரியில் சேர்க்கப்படுவார்கள்.

மாணவர் சேர்க்கை நடைமுறையை எளிதாக்குவதற்கு மாணவர்களுக்கு கற்பித்தலையும் மாற்றத்தையும் ஒரு ஊடகத்தைத் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும். ஆன்லைன் மாணவர் சேர்க்கை நடைமுறையை மிகவும் திறமையாக நடத்துவதற்கு மண்டல அளவில் மாணவர் சேர்க்கையை நடத்துவது குறித்து மாநில அரசு சிந்திக்க வேண்டும் அரசு கல்லூரி பேராசிரியர்கள் வட்டாரம் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு, கல்லூரிகள் மொழி பாடங்களைத் தவிர நான்கு பாடங்களில் மதிப்பெண்களின் அடிப்படையில் பி.ஏ, பி.எஸ்.சி மற்றும் பி.காம் ஆகியவற்றுக்கான தரவரிசைப் பட்டியல்களைத் தயாரித்தன. பி.ஏ. தமிழுக்கான தரவரிசை பட்டியல் 12ம் வகுப்பு தமிழ் மதிப்பெண்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. அதே போல, பி.ஏ ஆங்கில இலக்கியத்துகான தரவரிசை பட்டியல் 12ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தின் மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu College College Admission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment