தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் (DoTE) பாலிடெக்னிக் (TNDTE டிப்ளமோ) அக்டோபர் 2024 தேர்வுகளுக்கான முடிவுகளை எப்போது வெளியிடும்? தெரிந்துக் கொள்வது எப்படி? என்பதை இப்போது பார்ப்போம்.
தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகளை கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தியது. செய்முறைத் தேர்வுகள் அக்டோபரில் நடந்தன. எழுத்துத் தேர்வுகள் நவம்பரில் நடந்தன. இதற்கான தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட உள்ளது. இந்த தேர்வு முடிவுகள் வழக்கமாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் வெளியிடப்படும்.
அந்த வகையில் அக்டோபர் 2024 செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் ஜனவரி அல்லது பிப்ரவரி 2025 இல் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும், மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
TNDTE டிப்ளமோ தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்வது எப்படி?
படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் – https://dte.tn.gov.in/
படி 2: முடிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்
படி 3: தேவையான உள்நுழைவுச் சான்றுகளை உள்ளிடவும்
படி 4: ரிசல்ட்டை பதிவிறக்கம் செய்து, குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்
தமிழ்நாடு பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு என்பது செமஸ்டர் வாரியாக ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும் மாநில அளவிலான தேர்வாகும்.