scorecardresearch

அரசு பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா; நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற கல்வித்துறை ஏற்பாடு

அரசுப் பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி வினா; நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

அரசு பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா; நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற கல்வித்துறை ஏற்பாடு

TN Education dept conduct quiz for class 12 students to crack entrance exam: அரசுப் பள்ளிகளில் படிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற, வினாடி வினாக்களை நடத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

வினாடி வினாக்கள் பன்னிரண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்களின் அடிப்படையில் கொள்குறி வகை கேள்விகள் (MCQ) வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களில் வினாடி வினாக்களில் கலந்துக் கொள்ளலாம்.

இது குறித்து அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில், தேர்வு நோக்கத்திலான இந்த வினாடி வினாக்கள், மாணவர்கள் பயிற்சி பெறவும், காலப்போக்கில் அவர்களின் திறன்களை மேம்படுத்தவும் உதவும். வினாடி-வினா ஹைடெக் ஆய்வகத்தில் கிடைக்கும், மேலும் மாணவர்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணிக்குப் பிறகு அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுத் தேர்வுகளுக்கு முன்னும், பொதுத் தேர்வுகள் எழுதிய பின்னரும் மாணவர்கள் ஹைடெக் ஆய்வகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். கல்வி நோக்கத்திற்காக ஆய்வகங்களை அணுக ஆர்வமுள்ள மாணவர்களுக்கு உதவுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வகையில் ஹைடெக் ஆய்வகங்களில் பாட ஆசிரியர்கள் சுழற்சி முறையில் இருக்க வேண்டும். இந்த முயற்சி தமிழக பள்ளி மாணவர்களை அவர்கள் விரும்பும் எந்தவொரு போட்டித் தேர்வு அல்லது நுழைவுத் தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் நன்கு தயார்படுத்த உதவும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்.14 இனி சமத்துவ நாள் – மு.க ஸ்டாலின்

நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வினாடி வினாக்கள் சிறந்த முயற்சியாக இருக்கும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர். மேலும், பெரும்பாலான போட்டித் தேர்வுகள் MCQ அடிப்படையிலானவை மற்றும் ஆன்லைனில் நடத்தப்படும். அந்த தேர்வுகள் மாணவர்களின் கருத்தியல் அறிவை சோதிக்க கூடியவை. எனவே ஹைடெக் ஆய்வகத்தில் உள்ள வினாடி வினாக்கள் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியை அளிக்கும் என்றும் கல்வியாளர்கள் நம்புகின்றனர்.

அதேநேரம் நுழைவுத் தேர்வுக்கு ஏற்ற வகையில், வினாடி வினாக்களுடன், மாணவர்களுக்கு உதவிக்குறிப்புகளை வழங்கமாறு கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tn education dept conduct quiz for class 12 students to crack entrance exam