போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சித் திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததை அடுத்து, மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை 500-லிருந்து 1,400 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி, யு.பி.எஸ்.சி, GATE, GMAT, IES மற்றும் TOEFL உள்ளிட்ட தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளுக்கு அரசு இலவசப் பயிற்சி வழங்குகிறது.
சென்னை, கோவை, சேலம், மதுரை என 4 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ள இலவசப் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் (CECC) தற்போது ஆண்டுக்கு 500 மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி), பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) மற்றும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்ஆர்பி) ஆகிய தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த இலவசப் பயிற்சி திட்டத்திற்கு 500 மாணவர்களுக்கு அரசு ரூ.42.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த திட்டத்தில் 1,400 மாணவர்கள் வரை சேர்க்கப்பட உள்ள நிலையில் ரூ.77 லட்சம் நிதி ஒதுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த பயிற்சிக்கு விண்ணப்பிப்பது எளிது என்றும், 10-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு நடத்தப்பட்டு, அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் எனவும் அதிகாரிகள் கூறினர்.
இலவசப் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சிக்கு 500 மாணவர்களுக்கு ரூ.42.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது, மேலும் 1,400 மாணவர்கள் தங்குவதற்கு கூடுதலாக ரூ.77 லட்சம் ஒதுக்க அரசு திட்டமிட்டுள்ளது. இலவசப் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களுக்கு விண்ணப்பிப்பது எளிதானது என்றும், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு நடத்தப்பட்டு, அனைவருக்கும் சம வாய்ப்புகளை உறுதி செய்யும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“