Advertisment

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 26 முதல் ஆன்லைன் விண்ணப்பம் - கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு முதலமாண்டில் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 26ம் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
tamil nadu govt arts and science college admission online application starts from july 26th, tn govt arts and science college online application opens, arts and science college online application starts from july 26 to august 10, தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 26ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பm, கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு, collegiate directorate, tamil nadu, arts and scinece college application

தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு முதலமாண்டில் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 26ம் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Advertisment

கல்லூரிக் கல்வி இயக்ககம் சார்பில் இன்று (ஜூலை 25) வெளியிட்டுள்ள் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2021- 2022) விண்ணப்பங்களை www.tngasa.org மற்றும் www.tngasa.in என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம்.

தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்புகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு இணைய நாளை (26/07/2021) முதல் ஆகஸ்ட் 10- ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation centre-AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து 'AFC' மையங்களிலும் போதிய அளவில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விண்ணப்பக் கட்டணம்:

கல்லூரி விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பத்தாரர்கள் Debit Card/Credit Card/Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பதிவுக் கட்டணம் மட்டும் ரூபாய் 2 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர்கள் ஒரு கல்லூரிக்கு விண்ணப்பக் கட்டணமாக 48 ரூபாயும், பதிவு கட்டணமாக 2 ரூபாயும் செலுத்தி விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai- 6" என்ற பெயரில் 26/07/2021 அன்று அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.

மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் மேற்குறித்த இணையதளங்கள் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu College Admission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment