Advertisment

படிக்கிற பள்ளியிலேயே 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு: தமிழக அரசு பரிசீலனை

தேர்வு எழுதுவோரின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே அதிகமானோருக்கு வாய்ப்புகளை அளிக்கும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
tn 12th public exam timetable 2021, tn 12th publlic exam, tn govt announced 12th public exam timetable, tn 12th board exam begins from may 3

கொரோனா பெருந்தொற்று காரணமாக, தேர்வு எழுதுவோரின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே அதிகமானோருக்கு வாய்ப்புகளை அளிக்கும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்க தமிழக அரசு பரிசீலனை சேது வருகிறது.

Advertisment

தமிழகத்தில், 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் மீண்டும் செயல்பட்டு வருகின்றன. மேலும், 12ம் வகுப்பு  தேர்வுக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, மே மாதம் 3 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெறும். பொதுவாக, தேர்வு அட்டவணை வெளியிட்ட பட்டதால் தேர்வு மையங்கள் ஒதுக்குவது குறித்த முடிவும் எடுக்கப்பட்டிருக்கும்.

9 ஆம் வகுப்பு தவிர, பிற வகுப்பு மாணவர்களுக்கு வாரியத் தேர்வுகளை நடத்த பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், தேர்வு எழுதுவோர் அவர்களது வீடுகளுக்கு அருகிலேயே தேர்வு எழுதுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

TN Plus 2 Exam: எந்தெந்த தேர்வுகளுக்கு இடையே எத்தனை நாள் இடைவெளி?

இது  குறித்து தமிழக முதல்வரிடம் ஏற்கனவே  கோரிக்கை மனு ஒன்றை ஆசரியர்கள் சங்கம் அளித்துள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட பள்ளியில் 100-க்கும் குறைவாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இருந்தால், அப்பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்படாது. எனவே, மாணவர்கள் பிற நகரங்களில் உள்ள தேர்வு மையங்களுக்கு அழைக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களை பயணிக்க வைப்பது தொற்று பரவலை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு; தமிழக அரசு அறிவிப்பு

இருப்பினும், படிக்கிற பள்ளியிலேயே பொதுத் தேர்வு  எழுத அனுமதித்தால் நியாயமற்ற தேர்வு நடைமுறைகள்  அதிகமாகும். உதாரணமாக, தங்கள் பள்ளியில் படிக்கும்  மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவக் கூடிய சூழல் உருவாகும்.  இதன் விளைவாக, கண்காணிப்பாளர்கள்,  பறக்கும் படையினர்,  தேர்வு அதிகாரிகளின் எண்ணிக்கையும்  அதிகமாகும் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Board Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment