தமிழகத்தில் 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ‘டீன்’ (முதல்வர்) பணியிடம் காலியாக உள்ளதால், நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தது. இந்த 14 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் நிரந்தரமாக டீன்-களை நியமிக்க வேண்டும் என்று மருத்துவப் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு டீன்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உத்தரவை சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹு ஐ.ஏ.எஸ் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தமிழக அரசு நியமனம் செய்துள்ள 14 மருத்துவக் கல்லூரிகளின் டீன்கள் விபரம் பின்வருமாறு:-
1. ஜி.சிவசங்கர், யூராலஜி பேராசிரியர், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் - செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி டீன்
2. எம்.பவானி, மருத்துவ மேற்பார்வையாளர், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை - கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி டீன்
3. டி.ரவிக்குமார், மருத்துவ மேற்பார்வையாளர், கோவை இ.எஸ்.ஐ.சி மருத்துவமனை - பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி டீன்
4. வி.ராமலட்சுமி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் - ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி டீன்
5. எஸ்.குமாரவேல், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் - திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி டீன்
6. எல்.அருள் சுந்தரேஷ் குமார், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் - மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன்
7. ஆர்.அமுதா ராணி, நெல்லை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் - ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி டீன்
8. பி.லியோ டேவிட், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் - சென்னை கீழ்ப்பாகம் அரசு மருத்துவக் கல்லூரி டீன்
9. ஜே.தேவி மீனல், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் - சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை டீன்
10. எஸ்.கலைவாணி, மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் பேராசிரியர் - புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி டீன்
11. எஸ்.முத்துசித்ரா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் - தேனி அரசு மருத்துவக் கல்லூரி டீன்
12. வி.லோகநாயகி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் - கரூர் அரசு மருத்துவக் கல்லூரி டீன்
13. டி.ஜெயசிங், கோவை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் - விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி டீன்
14. எம்.ரோஹினிதேவி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் - வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி டீன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“