/indian-express-tamil/media/media_files/2025/10/04/vetri-nichayam-scheme-2025-10-04-21-56-05.jpg)
'வெற்றி நிச்சயம்' திட்டத்தில் 5 இலவசச் சான்றிதழ் படிப்புகள்: பயிற்சியுடன் வேலைவாய்ப்பும் உறுதி
தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைத் தேடித் தரும் வகையில், 'வெற்றி நிச்சயம்' திட்டத்தின் கீழ் பல துறைகளில் இலவசச் சான்றிதழ் படிப்புகள் தற்போது வழங்கப்படுகின்றன. மேலும், பயிற்சி முடிக்கும் நபர்களுக்குப் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பொறியியல் பட்டப்படிப்பு அல்லது கணினி சார்ந்த பட்டப்படிப்புகளை முடித்து, திறன்களை வளர்த்துக்கொண்டு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறத் தயாராக உள்ளவர்கள், தற்போது வழங்கப்படும் 5 வகையான சான்றிதழ் படிப்புகளில் ஏதேனும் ஒன்றுக்கு விண்ணப்பித்துப் பயன்பெறலாம். தற்போது பொறியியல் மற்றும் கணினி சார்ந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கக் கோரப்படும் 5 இலவசச் சான்றிதழ் படிப்புகள் மற்றும் அவற்றின் விவரங்கள் பற்றி பார்ப்போம்.
படிப்பு பெயர் | பயிற்சி மையங்கள் | பயிற்சி நேரம் | விண்ணப்ப லிங்க் |
1. நெட்வொர்க்கிங் மற்றும் சைபர் பாதுகாப்பு (CISCO) | கோவை, காஞ்சிபுரம், மதுரை, சேலம், திருச்சி, நெல்லை | 150 மணி நேரம் | இணைப்பு |
2. டேட்டா அனலெக்டிஸ் (Data Analytics Using Python) | செங்கல்பட்டு, சென்னை, கோவை, காஞ்சி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம் | 150 மணி நேரம் | இணைப்பு |
3. டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) | கரூர், கிருஷ்ணகிரி, தென்காசி | 150 மணி நேரம் | இணைப்பு |
4. மைக்ரோசாப்ட் Azure ஏஐ இன்ஜினியர் | செங்கல்பட்டு, கடலூர், குமரி, மதுரை, சேலம், தேனி | 150 மணி நேரம் | இணைப்பு |
5. மைக்ரோசாப்ட் Power BI டேட்டா அனலெக்டிஸ் | சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர் | 150 மணி நேரம் | இணைப்பு |
இந்த இலவசப் பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகளுக்கான தகுதிகள் பின்வருமாறு:
தகுதி:
பொறியியல் பட்டப்படிப்புகள்: CSE, ECE, EEE முடித்தவர்கள்.
கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகள்: BCA, B.Sc. CS, MCA முடித்தவர்கள்.
பொதுவான தகுதி: கணினி அறிவியல் பாடமாகக் கொண்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 21 முதல் 25 வயது வரை இருக்க வேண்டும்.
தேர்ச்சி ஆண்டு: 2021 முதல் 2025 வரை தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளாக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த இலவசப் பயிற்சியைப் பயன்படுத்திக்கொள்ளத் தகுதியுடைய பட்டதாரிகள், மேலே கொடுக்கப்பட்டுள்ள அந்தந்தப் படிப்புக்கான இணைப்புகளைப் பயன்படுத்தி உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.