Advertisment

புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை லீவ்: 10-ம் வகுப்பு கணித தேர்வு தேதி மாற்ற ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு கணித தேர்வு தேதி மாற்ற வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
 TN Graduate Teachers Association on 10th maths Exam Tamil News

11 ஆம் வகுப்புக்கு மே14 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்புக்கு மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

Education | 10th-exam: தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிட்டார். அதன்படி, 10ம் வகுப்புக்கு மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரையிலும், 11ம் மாணவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறுகின்றன. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

மேலும், 10 ஆம் வகுப்புக்கு மே10 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. 11 ஆம் வகுப்புக்கு மே14 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்புக்கு மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

கோரிக்கை

இந்நிலையில், அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு கணித தேர்வு தேதி மாற்ற வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வுக்கு முன்பு புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை வர உள்ளதால் தேர்வு தேதியை மாற்றவும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Education 10th Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment