Advertisment

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

TN HRCE Dept invites application for JTA jobs: இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
Nov 15, 2021 18:03 IST
New Update
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; 8-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

இந்து சமய அறநிலையத்துறையில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையில், நகை மதிப்பீட்டுக் குழுவில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. மொத்தம் 20 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 17.11.2021க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் (Junior Technical Assistant)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் நகை மதிப்பிடுதலில் 5 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி : 01.07.2021 அன்று 28 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.35,400 – 1,12,400

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/87/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, 119 உத்தமர் காந்தி சாலை, சென்னை – 600034.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.11.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/87/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Nadu Jobs #Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment