தமிழ்நாடு குழந்தைகள் மேம்பாட்டு மையத்தில் வேலை; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

TN ICDS recruitment 2021 apply soon: தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை மைய வேலைவாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை மையத்தில் காலியாக உள்ள ஒருங்கிணைப்பாளர், உதவியாளர் உள்ளிட்டப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் அனைத்தும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 95 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தகுதியுள்ளவர்கள் 24.12.2021க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator)

காலியிடங்களின் எண்ணிக்கை : 28

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,000

ஒன்றிய திட்ட உதவியாளர் (Block Project Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 52

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. 1 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (District Coordinator)

காலியிடங்களின் எண்ணிக்கை : 05

கல்வித் தகுதி : இளங்கலை கணினி அறிவியல் (Computer Science) அல்லது தகவல் தொழில்நுட்பத்தில் (IT) பட்டப்படிப்பு. 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 30,000

மாவட்ட திட்ட உதவியாளர் (District Project Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 05

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,000

நிதி மேலாண்மை நிபுணர் (Financial Management- Specialist)

காலியிடங்களின் எண்ணிக்கை : 01

கல்வித் தகுதி : CA/ CS/ CMA (CWA) or MBA (Finance). 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 60,000

கணக்காளர் (Accountant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 02

கல்வித் தகுதி : PG degree in Commerce/ Accounting/ CWA-Inter/CA Inter. 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 30,000

திட்ட இணை உதவியாளர் (Project Associate)

காலியிடங்களின் எண்ணிக்கை : 01

கல்வித் தகுதி : இளங்கலை கணினி அறிவியல் (Computer Science) அல்லது தகவல் தொழில்நுட்பத்தில் (IT) பட்டப்படிப்பு. 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 25,000

தரவு உள்ளீடு இயக்குனர் (Date Entry Operator)

காலியிடங்களின் எண்ணிக்கை : 01

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Application_form_NNM.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : Director cum Mission Director, Department of Integrated Child Development Services, No.1, Dr.M.G.R Salai, Taramani, Chennai – 600 113.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.12.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Terms_of_Recruitment.pdf என்ற இணையத்தளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tn icds recruitment 2021 apply soon

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com