தமிழ்நாடு மருத்துவ சேவையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் தற்காலிக நியமனத்திற்கான அறிவிப்பு தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தால் 15 மார்ச் 2024 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இப்பணிக்கு 24 ஏப்ரல் 2024 முதல் ஜூலை 15 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். mrb.tn.gov.in என்ற தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2553 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
யார் விண்ணப்பிக்கலாம்
இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மெட்ராஸ் மெடிக்கல் ரெஜிஸ்ட்ரேஷன் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பயிற்சியாளர்களாக இருக்க வேண்டும்
மெட்ராஸ் மெடிக்கல் ரெஜிஸ்ட்ரேஷன் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பயிற்சியாளர்களாக இருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 12 மாதங்கள் ஹவுஸ் சர்ஜனாக (CRRI) பணி செய்திருக்க வேண்டும்.
தகுதியுள்ள மருத்துவர்கள் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் கட்டாயம் தங்களை பதிவு செய்திருக்க வேண்டும்.
உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு தமிழ் மொழி தகுதித் தேர்வு மற்றும் கணினி அடிப்படையிலான தேர்வு ஆகிய 2 முறைகளில் தேர்வு நடத்தப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“