தமிழக சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு; 7296 பணியிடங்கள்; 12, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

TN NHM invites application for Nurse and Health inspector posts: தமிழக சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு; 7296 பணியிடங்கள்; 12, டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு அரசின் மாநில நலவாழ்வு சங்கத்தின் கீழ் மாவட்டந்தோறும் செயல்படும் துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு மையங்களில் இடைநிலை சுகாதாரப் பணியாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 7296 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் அனைத்தும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது. தகுதியுள்ளவர்கள் 15.12.2021க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இடைநிலை சுகாதாரப் பணியாளர் (Midlevel Healthcare Provider)

காலியிடங்களின் எண்ணிக்கை : 4848

கல்வித் தகுதி : செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டப்படிப்பு (B.Sc Nursing) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சுகாதார ஆய்வாளர் (Health Inspector)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2448

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ அல்லது டிகிரி படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட இணையதள பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அந்தந்த மாவட்ட நலவாழ்வுச் சங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

இடைநிலை சுகாதாரப் பணியாளர் : https://nhm.tn.gov.in/sites/default/files/documents/Application_MLHP.pdf

சுகாதார ஆய்வாளர் : https://nhm.tn.gov.in/sites/default/files/documents/Application_HI.pdf

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.12.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட இணையதளப் பக்கங்களைப் பார்வையிடவும்.

இடைநிலை சுகாதாரப் பணியாளர் : https://nhm.tn.gov.in/sites/default/files/documents/MLHP_Vacancy.pdf

சுகாதார ஆய்வாளர் : https://nhm.tn.gov.in/sites/default/files/documents/HI_Vacancy.pdf

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tn nhm invites application for nurse and health inspector posts

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com