TN NMMS பிப்ரவரி 2023: தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் பிப்ரவரி 2023க்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் (National means cum Merit Scholarship) திட்டத்திற்கான முடிவுகளை சனிக்கிழமை வெளியிட்டது. தேர்வெழுதிய மாணவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான http://tndge.org/ அல்லது http://dge.tn.gov.in/ இல் பார்க்கலாம்.
தேர்வு பிப்ரவரி 25 அன்று நடத்தப்பட்டது. மொத்தம் 6695 மாணவர்கள் உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்: ஆண்டுக்கு ரூ10- 20 லட்சம் சம்பளம்; VLSI துறையில் பி.டெக், டிப்ளமோ படிப்புகளை அறிமுகப்படுத்திய AICTE
TN NMMS பிப்ரவரி 2023: முடிவை செக் செய்வது எப்படி?
படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் — http://tndge.org/ அல்லது http://dge.tn.gov.in/
படி 2: தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்
படி 3: பட்டியலைப் பார்த்து உங்கள் பெயரைத் தேடுங்கள்
படி 4: எதிர்கால குறிப்புக்காக பட்டியலைப் பதிவிறக்கவும்
இறுதி விடைக்குறிப்பு மார்ச் 20 அன்று வெளியிடப்பட்டது. தேர்வெழுதிய மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை தெரிந்துக் கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளமான http://dge.tn.gov.in/ க்குச் சென்று ரிசல்ட் தாவலைக் கிளிக் செய்து NMMS பிப்ரவரி 2023 ரிசல்ட்களுக்காக கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும். உங்கள் ரோல் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு ரிசல்ட்டை சரிபார்க்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil