Advertisment

நீட் தேர்வு: தமிழகத்தில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரிப்பு

தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 95 சதவீத மதிப்பெண் பெற்றவர்களில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News

Tamil News updates

தேசிய மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு எதிரான சூழ்நிலையை உருவாக்குகிறது என்று என்று தமிழக அரசு நீட் தேர்வை எதிர்த்து வரும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து தங்கள் செயல்திறனை மேம்படுத்தி வருகின்றனர்.

Advertisment

நான்கு ஆண்டுகளில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 95 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களில், தமிழக மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது, 2019 முதல் 2022 வரை நீட் தேர்வெழுதும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 7.38 சதவீதம் அதிகரித்துள்ளது - இது தேசிய அளவில் 16.3 சதவீதமாக உள்ளது.

2017-18 ஆம் ஆண்டில், நாட்டிலுள்ள எந்த மருத்துவக் கல்லூரியிலும் சேர்வதற்கான ஒற்றைச் சாளரத் தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நடைமுறைக்கு வந்தது. நீட் தேர்வுக்கு முன், தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்தப்பட்டது.

2017 முதல், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்து வருகிறது. நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்பது ஆளும் தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது. தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை, இந்தியன் எக்ஸ்பிரஸ் பெற்ற புள்ளிவிவரங்களின்படி, நான்கு ஆண்டுகளில் முதலிடம் பெற்ற தமிழக மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இடம் கிடைக்க, மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது, அதிக மதிப்பெண் பெற வேண்டும் அல்லது அதிக சதவீத மதிப்பெண் பெற வேண்டும். எனவே, மருத்துவராக வேண்டும் என விரும்பும் மாணவர்களின் கவனம், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களில் அதிக சதவீதம் மதிப்பெண் எடுப்பதில் இருக்கும்.

2019 முதல் 2022 வரையிலான தரவுகள், தமிழ்நாட்டில் 95 சதவீதம் மற்ரும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 2,307 மாணவர்கள் அல்லது 1.87% மாணவர்களாக உள்ளனர். 2022-இல் தமிழ்நாட்டில் இருந்து தேர்வெழுதிய மொத்த மாணவர்களில், 3.48 சதவீதம் மாணவர்கள் அல்லது 4,600 மாணவர்கள் என அதிகரித்துள்ளது.

தேசிய அளவில், 2022ல், இந்தியா முழுவதும் தேர்வெழுதிய 17,72,329 பேரில் 88,343 பேர் 95வது சதவீதத்திற்கும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இது மொத்த விண்ணப்பதாரர்களில் 4.9% ஆகும்.

தேர்வெழுதிய மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களைக் கொண்ட மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை விட அதிக மதிப்பெண் பெற்றவர்களில் தமிழகத்தின் செயல்திறன் சிறப்பாக உள்ளது.

மகாராஷ்டிராவில், 2022 ஆம் ஆண்டில் 95 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களில் 3% பேர் மதிப்பெண் பெற்ற்றுள்ளனர். மறுபுறம், இந்த ஆண்டு நீட் தேர்வில் இரண்டாம் இடத்தில் உள்ள உத்தரப் பிரதேசம், அதன் 2.14 லட்சம் பேரில் 5.3% பேர் 95 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவர்களைப் போல, நீட் தேர்வுக்கான பயிற்சி பெற முடியாததால், நீட் தேர்வில் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. நீட் தேர்வு கிராமப்புற - நகர்ப்புற மாணவர்களுக்கு இடையேயான் வேறுபாட்களை ஆழப்படுத்துகிறது என்று தமிழக அரசியல் கட்சிகள் வாதிடுகின்றன.

மருத்துவ சேர்க்கையில் நீட் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட குழு, தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்களின் விகிதம் சராசரியாக 61.45% (நீட் 2016-17க்கு முன்) இருந்தது அது (நீட் 2020-21க்குப் பின்) 50.81% ஆகக் குறைந்துள்ளது.

இந்த குழுவின் அறிக்கைப்படி, மருத்துவக் கல்லூரிகளில் ஆங்கில வழிப் பள்ளி மாணவர்களின் பங்கு 85.12% லிருந்து 98.01% ஆக நீட் தேர்வுக்குப் பிறகு அதிகரித்துள்ளது. மறுபுறம், தமிழ் வழிப் பள்ளி மாணவர்கள் இப்போது வெறும் 1.99% (2020-21) உள்ளனர். இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு (2016-17) 14.88% ஆக இருந்தது.

இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய மாநில அரசு அமைத்த குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ஜவஹர் நேசன் கூறுகையில், “கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் செயல்திறன் மேம்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. ஒரு சிறிய ஏற்றம் உள்ளது. ஆம். ஆனால், நீட் தேர்வை எதிர்ப்பதற்கான காரணங்கள் இன்னும் சரியாக உள்ளது. இந்த நுழைவுத் தேர்வு பயிற்சியை ஊக்குவிக்கிறது. இதன் விளைவாக, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் பெரும்பாலானோர் பயிற்சிக்கு சேரக்கூடிய மாணவர்கள். இந்தத் தேர்வு நமது சமூகத்தின் ஒரு பிரிவை விட்டுச் சென்று கிராமப்புற-நகர்ப்புறப் பிரிவினையை அதிகப்படுத்துகிறது.” என்று கூறினார்.

இதற்கிடையில், அனைத்து மாநிலங்களுக்கிடையில், ராஜஸ்தான் - நாட்டின் பயிற்சி மையக் கோட்டையாகக் கருதப்படுகிறது - 2022-இல் 11.2 சதவிகிதம்: 95 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் அதிகபட்ச சதவிகிதம் உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment