Advertisment

இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள்

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மதிப்பெண் விவரங்களுடன் ஜூலை 19-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
TN Plus 2 exam results, Plus 2 public exam results, 2 exam results date announced, plus 2 exam results date, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், தமிழ்நாடு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 19ம் தேதி வெளியாகும், 12th exam results date, 12th exam results, 12th public exam results announced on July 19th, Tamilnadu Plus 2 results date announce, tn plus 2 public exam results on july 19, 12th standard public exam results

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழ்நாட்டில் 2020-21 கல்வி ஆண்டில் படித்த 10, 11ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது.

Advertisment

ஏனென்றால், மாணவர்கள் கல்லூரிகளில் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கப்படுகிறார்கள் என்பதால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. இந்த சூழலில்தான், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலை காரணமாக மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் தமிழ்நாடு அரசு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்ததாக அறிவித்தது.

இதையடுத்து, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் வழங்குவதற்காக வழிகாட்டு குழு அமைக்கப்பட்டது. வழிகாட்டு குழு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 25ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தனர்.

அந்த அறிக்கையில், “10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களுடைய சராசரி மதிப்பெண்ணில் 50 சதவீதமும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இருந்து 20 சதவீத மதிப்பெண்களும், 12ம் வகுப்பு செய்முறை தேர்வு மற்றும் அக மதிப்பீட்டில் இருந்து 30 சதவீத மதிப்பெண்களும் கணக்கிடப்படும்” என தெரிவிக்கப்பட்டது. இந்த அடிப்படையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடும் பணி முடிவடைந்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், “12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மதிப்பெண் விவரங்களுடன் ஜூலை 19-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “2020-2021ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு படித்த பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் 19.07.2021 அன்று காலை 1 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்களின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

  1. www.tnresults.nic.in
  2. www.dge1.tn.nic.in
  3. www.dge2.tn.nic.in
  4. www.dge.tn.gov.in

மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும்.

மேலும், பள்ளி மாணவர்கள் 22.07.2021 அன்று காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in மற்றும் www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu Exam Result Plus 2 12th Exam Mark
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment