தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வுக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மே மாதம் 3 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெறும்.
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக இழந்த வகுப்பு நேரத்தை ஈடு செய்யும் பொருட்டு 12ம் வகுப்பு 2021ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு பாடத்திட்டத்தில் 40 முதல் 50 சதவீத பாடஅளவு குறைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே தெரிவித்தது
நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு இயற்பியல், கணிதம், உயிரியியல் , வேதியியல் போன்ற பாடத்திட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே, மாணவர்கள் மேற்கூறிய பாடங்களில் அதிக கவனம் செலுத்துவத்து இன்றியமையாகிறது.
12ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை:
1. மே 3- மொழித்தாள்,
2.மே 5- ஆங்கிலம்
3.மே 7: கணிணி அறிவியல், உயிரி அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் தேர்வுகள்
4.மே 11- இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்
5.மே 17- கணிதம், விலங்கியல்
6.மே19- உயிரியியல்
7.மே 21- வேதியியல், கணக்குப்பதிவியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வைப் பொறுத்த வரை, பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை என்பதால், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் உள்ள முக்கியமான தலைப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். முந்தைய ஆண்டு வினாத்தாட்கள் அடிப்படையில், அதிக மதிப்பெண்களைக் கொண்ட அத்தியாயங்கள் / தலைப்புகளை படிக்க வேண்டும்.
மே 7ம் தேதி கணிணி அறிவியல், உயிரி அறிவியல் போன்ற பாடங்களுக்கான் தேர்வு நடைபெறுகிறது. பின்னர், மூன்று நாள் இடைவெளிக்குப் பிறகு இயற்பியல் தேர்வு (மே.11) நடைபெறுகிறது.
இயற்பியல் தேர்வில் இயக்கவியல், நவீன இயற்பியல், மின்சாரம் ஆகிய 3 தலைப்புகள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. உண்மையில், நீர் தேர்வில் 42 சதவிகித கேள்விகள் இயக்கவியல் பாடத்தில் இருந்து கேட்கப்படுகிறது. அதே போன்று, ஜேஇஇ தேர்விலும் இயக்கவியல் பாடத்திட்டம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, இந்த மூன்று நாள் இடைவெளியை மாணவர்கள் வேதியியல் பாடத்திட்டத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
கணிதம்/ விலங்கியல் போன்ற பாடப் பிரிவுகளுக்கான தேர்வு மே .17 அன்று நடைபெறுகிறது. கிட்டத்தட்ட ஐந்து நாள் இடைவெளிக்குப் பிறகு. ஜேஇஇ தேர்வில் மொத்தம் கேட்கப்படும் 90 கேள்விகளில் சுமார் 30 கேள்விகள் கேட்படுகின்றன. எனவே, இந்த 5 நாட்களில் அநேக நேரங்களில் கணிதம் பாடப்பிரிவில் தயாராகுவது நல்லது.
நீட் தேர்வுக்கு தயராகி வரும் மாணவர்கள் இந்த நாளை உயிரியல் மற்றும் வேதியியல் பாடங்களைத் தயார் செய்யலாம். இந்த இரண்டு பாடங்களுக்கும், ஒரு நாள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படுவதால் இந்த 5 நாட்களை திட்டமிட்டு செலவிட வேண்டும்.
உயிரியல் பாடத்தைப் பொறுத்தவரை, தாவர உடலியல், மரபியல், சூழலியல் ஆகிய தலைப்புகள் அதிக மதிப்பெண்களைக் கொண்டுள்ளன. மதிப்பெண்கள் வெயிட்டேஜின் அடிப்படையில் மேற்கூறிய மூன்று அத்தியாயங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. தாவர கட்டமைப்பு, உயிரணுக் கொள்கை, உயிரணு சுழற்சி, உயிரியல் பன்முகத்தன்மை போன்ற அத்தியாயங்களும் அதிக மதிப்பெண்களைக் கொண்டுள்ளன. தேர்வர்கள், முந்தைய ஆண்டு வினாத்தாட்களை பார்வையிடுவது சிறந்ததாக அமையும்.
வேதியியல் பாடத்திட்டத்தைப் பொறுத்த வரை 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடப்பிரிவில் உள்ள கரிம வேதியியல் அல்லது சேதன இரசாயனம் (Organic Chemistry) அதிக முக்கியத்துவம் பெறுகிறது. நீட் தேர்வின் முந்தைய ஆண்டு வினாத்தாட்களில் 27 சதவீத கேள்விகள் கரிம வேதியியலில் இருந்து கேட்கப்பட்டன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.