/indian-express-tamil/media/media_files/2025/07/27/naan-mudhalvan-scheme-2025-07-27-12-05-45.jpg)
கிளவுட் கம்ப்யூட்டிங் முதல் ட்ரோன் சர்வே வரை: "நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் புதிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி!
தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் டிப்ளமோ மாணவர்களுக்கு, நடப்பு கல்வி ஆண்டில் கிளவுட் கம்ப்யூட்டிங் உட்பட 14 புதிய, வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பப் படிப்புகளில் "நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (DoTE) அறிவித்துள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக வட்டாரங்களின்படி, இந்த சிறப்புப் பயிற்சி திட்டத்தில் பல்வேறு திறன் அடிப்படையிலான படிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing)
தகவல் பிணைய கேபிளிங் (Information Network Cabling)
இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) மற்றும் அதன் பயன்பாடுகள் (Internet of Things and its Applications)
கட்டுமானச் செலவு மதிப்பீடு (Construction Cost Estimation)
ட்ரோன் சர்வேயிங் (Drone Surveying)
அடிட்டிவ் உற்பத்தி (Additive Manufacturing)
ITI தொழில்துறை 4.0 ஆய்வகங்கள் (ITI Industry 4.0 Labs)
தொழில்துறை வடிவமைப்பு தொழில்நுட்பம் (Industrial Design Technology)
"இத்திட்டம் மாணவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து, வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டு உள்ளது. எனவே, கல்லூரி முதல்வர்கள் இத்திட்டத்தை அதன் நோக்கத்திற்கேற்ப திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்," என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சிறப்புப் படிப்புகள் பாடத்திட்டத்துடன் இணைக்கப்பட்ட கட்டாய துணைப் படிப்புகள் என்றும், மாணவர்கள் தகுதி பெறுவது அவசியம் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார். ஏனெனில், இந்தப் பாடங்களில் அவர்களின் சிறப்பான செயல்பாடுகள் மதிப்பெண் பட்டியலிலும் சேர்க்கப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்தும் ஒரு பகுதியாக, ஒவ்வொரு செமஸ்டர் தொடக்கத்திலும் மாணவர்களுக்குப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, ஆசிரியர்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் நடத்தப்படும். இதன் மூலம், ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தகுந்த வகையில் தயாராக இருப்பார்கள் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.