TN Postal Circle Recruitment 2019: 510 மல்டி டாஸ்கிங் பணிகளை நிரப்புவதற்கு தமிழ்நாடு அஞ்சல்துறை வட்டம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணி குரூப் சி வகையை சார்ந்ததாகும். அதன் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் https://tamilnadupost.nic.in இந்த அறிவிப்பை டவுன்லோடு செய்யலாம்.
18 வயது முதல் 25 வயதுடையவர்களும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தேர்வர்களும் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணபிக்கலாம். அரசு வேளையில் இருப்பவர்களுக்கு ஐந்து வருடம் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.சி/எஸ்.டி போன்ற பட்டியல் ஜாதி பிரிவினருக்கு ஐந்து வருடம் வயது வரம்பில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு போன்றவைகள் மூலம் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதம் 22ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு இரண்டு தாள்களை கொண்டிருக்கிறது.


அப்ளிகேஷன் பார்ம் டவுன்லோடு செய்யுங்கள்
மேலே, இருக்கும் அப்ளிகேஷன் பாரத்தை டவுன்லோடு செய்து , அதில் அனெக்சர் II இருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து வரும் 29ம் தேதிக்குள் அந்தந்த டிவிஷ்னல் தபால் அலுவலகத்தில் ஒப்படைத்தருக்க வேண்டும்.