TN School Exam Results Date: தமிழ்நாட்டில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் இயங்கும் பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 2-வது வாரத்தின் இறுதிக்குள் பள்ளித் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை ஆரம்பமாகிறது. தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றின் 6, 7, 8, 9 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மே 2-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை புதிதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
dge.tn.gov.in announced Tamilnadu School Exam Results Date: தமிழ்நாடு பள்ளித் தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு
Tamilnadu School Exam Results Date: தமிழ்நாடு பள்ளித் தேர்வு முடிவுகள்
இது தொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. மாவட்டக் கல்வி அலுவலரின் ஆய்வுக்கு முன்பு தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்றும் பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.
8-ம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாய தேர்ச்சிப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. 9-ம் வகுப்பில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு உடனடியாக மறு தேர்வு நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மறு தேர்வு ஜூன் 3 முதல் ஜூன் 10-க்குள் நடைபெறும். இதன் மூலமாக நடப்பு கல்வி ஆண்டிலேயே அந்த மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும்.
12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ம் தேதியும், 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29-ம் தேதியும் வெளியிட இருப்பதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.