TN Results 2019: தமிழ்நாடு பள்ளித் தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு

tamilnadu results: 8-ம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாய தேர்ச்சிப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

Tamil Nadu HSE +2 Result 2019, Tamil Nadu 12th Result 2019

TN School Exam Results Date: தமிழ்நாட்டில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் இயங்கும் பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 2-வது வாரத்தின் இறுதிக்குள் பள்ளித் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை ஆரம்பமாகிறது. தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றின் 6, 7, 8, 9 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மே 2-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை புதிதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

dge.tn.gov.in announced Tamilnadu School Exam Results Date: தமிழ்நாடு பள்ளித் தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு
dge.tn.gov.in announced Tamilnadu School Exam Results Date: தமிழ்நாடு பள்ளித் தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு

Tamilnadu School Exam Results Date: தமிழ்நாடு பள்ளித் தேர்வு முடிவுகள்

இது தொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. மாவட்டக் கல்வி அலுவலரின் ஆய்வுக்கு முன்பு தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்றும் பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.

8-ம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாய தேர்ச்சிப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. 9-ம் வகுப்பில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு உடனடியாக மறு தேர்வு நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மறு தேர்வு ஜூன் 3 முதல் ஜூன் 10-க்குள் நடைபெறும். இதன் மூலமாக நடப்பு கல்வி ஆண்டிலேயே அந்த மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும்.

12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ம் தேதியும், 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29-ம் தேதியும் வெளியிட இருப்பதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tn school exam results date

Next Story
Govt Jobs: இந்த வாரம் அப்ளை செய்ய வேண்டிய அரசு பணிகள்!Tamilnadu jobs
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com