/tamil-ie/media/media_files/uploads/2022/05/public-exam.jpg)
TN school examination board to evaluate over 90 lakhs answer papers in 9 days: பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு சரியான நேரத்தில் வகுப்புகளை தொடங்கும் வகையிலும், கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு உதவும் வகையிலும், தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் ஜூன் 1 முதல் ஒன்பது நாட்களுக்குள் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை ஜூன் 8 ஆம் தேதிக்குள் முடிக்கவும், ஜூன் 23 ஆம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிடவும், அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து சுமார் 90 லட்சம் விடைத்தாள்கள் 9 நாட்களில் திருத்தப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்: TNPSC Jobs; தமிழ்நாடு அரசில் 42 காலியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
தமிழ்நாடு மாநில கல்வி வாரியத்தின் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள், உயிரியல் மற்றும் வணிகக் கணிதம் ஆகிய பாடங்களின் தேர்வுகளுடன் நேற்று (திங்கள்கிழமை) முடிவடைந்தது. இந்த ஆண்டு பொதுத் தேர்வில் முறைகேடு சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 17 மட்டுமே, இது சமீபத்திய ஆண்டுகளில் மிகக் குறைவு என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.