நவம்பர் 14 ஆம் தேதி parentcircle தன்னார்வ தொண்டு நிறுவனத்தின், ‘டிஸ்கனக்ட் டு ரீகனக்ட்’ திட்டத்தில் கலந்து கொள்ள, ஒவ்வொரு தலைமைக் கல்வி அதிகாரிகளும் தங்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை ஊக்குவிக்குமாறு பள்ளிகல்வி இயக்குநரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
parentcircle என்பது ராம்கோ நிறுவனத்தை சார்ந்த தொண்டு நிறுவனம் ஆகும். வரும் நவம்பர் 14ம் தேதி குழந்தை தினத்திற்காக டிஸ்கனக்ட் டு ரீகனக்ட்(#GadgetFreeHour) என்ற பிரசாரத்தை முன்வைத்து வருகிறது. அதாவது, நவம்பர் 14 ம் தேதியன்று இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை பெற்றோர்கள் தங்களது மொபைல் போன்களை அனைத்துவைத்து தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்ய வேண்டும் என்பதே இந்த பிரசாரத்தின் நோக்கமாகும்.
இது பெற்றோர்கள் மத்தியிலும், குழந்தைகள் மத்தியிலும் நல்ல தாக்கத்தை என்று parentcircle நம்புகிறது.
“அனைத்து தலைமை கல்வி அதிகாரிகளும் தங்கள் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த டிஸ்கனக்ட் டு ரீகனக்ட் என்ற பிரசாரத்தை கொண்டு செல்ல வேண்டும் ,” என்று பள்ளிகல்வி இயக்குநரக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .