By: WebDesk
September 18, 2020, 10:01:47 PM
Tamil Nadu Schools News: பள்ளிப் பாடத்திட்டங்கள் 40 % குறைக்கப்படுவதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார். கொரோனா பாதிப்புக்கு பிறகு பள்ளிக்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு இது ஆறுதல்!
கோபிச்செட்டிப்பாளையம் அருகே நம்பியூரில் அரசு நலத்திட்டப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெள்ளிக் கிழமை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
‘அரசால் அமைக்கப்பட்ட குழு தந்த அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. நீட் நுழைவுத் தேர்வில் மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்துதான் 90 சதவீதக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதுபோல எத்தனை போட்டித் தேர்வுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் பாடத்திட்டத்தை உருவாக்குவோம்.
மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க, கல்வித் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 6 மணி நேரம் ஒதுக்கப்படும். கொரோனா முடிவுக்கு வந்த பிறகு விளையாட்டுத் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும். சிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை’ என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil“
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook
Web Title:Tn schools tamil news tamil nadu schools syllabus reduced minister sengottaiyan