scorecardresearch

பிளஸ் டூ மாணவர்களுக்கு ஜூன் 1: எந்தெந்த வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு எப்போது? அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Anbil Mahesh
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

க.சண்முகவடிவேல்

2023 – 2024 ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித் துறையின் நாட்காட்டியை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் வெளியிட்டார். அப்போது, தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும். 2024 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் 18 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் மாதம் 19 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 8 ஆம் தேதியும் தொடங்கும்.

தேர்வு முடிவுகள் எப்படி வந்தாலும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். மதிப்பெண்கள் முக்கியம்தான் ஆனால் அதே நேரத்தில் உங்களுக்கான தனித் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மதிப்பெண்கள் குறைவாகிவிட்டால் திறமை இல்லாத மாணவர்கள் என நீங்கள் கருதிவிடக்கூடாது. உங்கள் திறமைக்கான நாற்காலி உங்களுக்காக காத்திருக்கிறது என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

அரசுப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், தனியார் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும் சிஏஜி (CAG) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது ஜனநாயக நாடு, மாணவர்கள் எந்தப் பள்ளியில் வேண்டுமானாலும் சேரலாம்.

அரசுப்பள்ளிக்கு முதல்வர் அளித்திருக்கக்கூடிய சலுகையைப் பார்த்து எங்களைத் தேடி மாணவர்கள் வரவேண்டும் என்ற உத்வேகத்தை பெறக்கூடிய அளவிற்குதான் இந்த சிஏஜி அறிக்கையை நான் அணுகுகிறேன். கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறையில் ஏற்பட்ட பின்னடைவுகளை சரிசெய்யும் நோக்கில் எங்கள் செயல்பாடுகள் இருக்கும்.” என்று கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tn schools to reopen on june 1 for classes 6 to 12 june 5 for classes 1 to 5 minister anbil mahesh

Best of Express