TN SSLC, HSE +1 Supplementary Result 2025: தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் (DGE) ஜூலை 31 ஆம் தேதி 2025 ஆம் ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு (SSLC) மற்றும் 11 ஆம் வகுப்பு (HSC +1) துணைத் தேர்வு முடிவுகளை அறிவிக்கிறது. 10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகளை tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் தெரிந்துக் கொள்ளலாம். துணைத் தேர்வு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தங்கள் தேர்வு எண் அல்லது பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூலை 4 முதல் ஜூலை 10 வரை நடத்தப்பட்டன. 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூலை 4 முதல் 11 வரை நடத்தப்பட்டன.
துணைத் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்வது எப்படி?
படி 1: தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் — tnresults.nic.in
படி 2: முகப்புப் பக்கத்தில் கிடைக்கும் ‘10 ஆம் வகுப்பு SSLC துணைத் தேர்வு முடிவுகள் 2025’ அல்லது ‘11 ஆம் வகுப்பு HSE +1 துணைத் தேர்வு முடிவுகள் 2025’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
படி 3: உள்நுழைவு சாளரத்தில், தேர்வு எண் அல்லது பதிவு எண், பிறந்த தேதி (DOB) ஆகியவற்றை உள்ளிட்டு கொடுக்கப்பட்ட பட உரையை (கேப்ட்சா) உள்ளிடவும்
படி 4: சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது திரையில் முடிவுகள் காண்பிக்கப்படும்.
படி 5: எதிர்கால குறிப்புக்காக பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்
முன்னதாக இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை, ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்தனர். மொத்தம் 8,71,239 மாணக்கர்கள் தேர்வெழுதியதில், 8,17,261 மாணக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மொத்த மாணக்கர்களில், 4,36,120 மாணவர்கள் மற்றும் 4,35,119 பேர் மாணவிகள். 4,00,078 மாணவிகள் மற்றும் 4,17,183 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு திருநங்கை மாணவர் தேர்வெழுதினார். திருநங்கை மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 100 சதவீதம். இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 93.80 சதவீதம்.
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடத்தப்பட்டன, அதே நேரத்தில் செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 22 முதல் 28 வரை நடைபெற்றன.
11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில், இந்த ஆண்டு 4,24,610 மாணவிகள் மற்றும் 3,82,488 மாணவர்கள் உட்பட மொத்தம் 8,07,098 மாணக்கர்கள் 11 ஆம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்தனர். 7,43,232 தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், இதில் 4,03,949 மாணவிகள் மற்றும் 3,39,283 மாணவர்கள். ஒட்டுமொத்தமாக, 11 ஆம் வகுப்பு மாணக்கர்களில் 92.09 சதவீதம் பேர் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றுள்ளனர்.