TN 10th Result 2023: தமிழக பள்ளிகளில் 2022-23 ம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற்றது. இதில், 3,60, 908 மாணவர்கள், 4,12,779 மாணவிகள் என மொத்தமாக 7,73,688 பேர் தேர்வு எழுதினர். இதேபோல், ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி நடந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 9, 38, 291 பேர் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை வெளியாகியது.
www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், எஸ்.எம்.எஸ் (sms) மூலமாகவும் முடிவுகளை அனுப்பப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிபெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியாகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil