Advertisment

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஹைலைட்ஸ்; மதிப்பெண் சான்றிதழ் எப்போது?

Tamil Nadu SSLC 10th Result 2024 Live: Check here Passing Percentage, Topper List, Result Direct Link here.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pod

TN SSLC 10th Result 2024 Live Updates in Tamil

 Tamil Nadu SSLC Result 2024 Live  : தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் (TNDGE) 10 ஆம் வகுப்பு அல்லது எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகளை மே 10ஆம் தேதி காலை 9:30 மணிக்கு வெளியிடுகிறது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: TN SSLC 10th Result 2024 Live Updates: Tamil Nadu tomorrow, websites to check dge.tn.gov.in, tnresults.nic.in. 

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி முடிவடைந்தது. 4107 மையங்களில் 9 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர்.

இந்தநிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகிறது. ரிசல்ட் வெளியிடப்பட்டதும், மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விபரங்களை அதிகாரப்பூர்வ இணையதளங்களான dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in மூலம் தெரிந்துக் கொள்ள முடியும். இணையதளங்களில் மதிப்பெண் விபரங்களைத் தெரிந்துக் கொள்ள மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி கொண்டு உள்நுழைய வேண்டும். 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்- முதலிடம் பிடித்த அரியலூர்; டாப் 5 மாவட்டங்கள் என்ன?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • May 10, 2024 12:13 IST
    10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: இ.பி.எஸ் வாழ்த்து



  • May 10, 2024 12:05 IST
    ரிசல்ட்டை பார்க்கும் முன்பே உயிரிழந்த மாணவர்

    சென்னை மதுரவாயலில் ஏற்பட்ட விபத்தில், 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில், ரிசல்ட்டை பார்க்கும் முன்பே பலியான சோகம் மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார் மாணவன் ஜீவா மதுரவாயில் பாலத்தின் கீழே இன்று காலை இரு சக்கர வாகனத்தில் வந்த போது, லாரி மோதி உயிரிழந்தார் லாரியை ஓட்டி வந்த டிரைவர், சாலையிலேயே வண்டியை நிறுத்தி விட்டு தலைமறைவு - போலீசார் விசாரணை



  • May 10, 2024 11:33 IST
    10ம் வகுப்புத் தேர்வு: முதல்வர் எக்ஸ் தளத்தில் முக்கிய பதிவு



  • May 10, 2024 10:50 IST
    தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் முதல் பத்து இடங்களை பிடித்துள்ள மாவட்டங்கள்

    • அரியலூர்                   – 97.31 %
    • சிவகங்கை               – 97.02 %
    • ராமநாதபுரம்          – 96.36 %
    • கன்னியாகுமரி     – 96.24 %
    • திருச்சி                         – 95.23 %
    • விருதுநகர்                 – 95.23 %
    • ஈரோடு                        – 95.08 %
    • பெரம்பலூர்              – 94.77 %
    • தூத்துக்குடி               – 94.39 %
    • விழுப்புரம்                – 94.11 %



  • May 10, 2024 10:46 IST
    பார்வை குறைபாடுடையோர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% சதவிகிதம் தேர்ச்சி

    சென்னை,  பூந்தமல்லி பார்வை குறைபாடுடையோர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% சதவிகிதம் தேர்ச்சி; 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 15 மாணவர்களுக்கும் தேர்ச்சி



  • May 10, 2024 10:32 IST
    தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 13-ம் தேதி முதல் வழங்கப்படும்

    10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 13-ம் தேதி முதல் வழங்கப்படும். 



  • May 10, 2024 10:28 IST
    10-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விரும்புபவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

    10-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விரும்புபவர்கள் நாளை (மே 11) முதல் விண்ணப்பிக்கலாம். மறு கூட்டல் / மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க விரும்பும்‌ பள்ளி மாணவர்கள்‌ மே 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  மறு தேர்வு ஜூலை 2-ம் தேதி நடைபெறுகிறது. 



  • May 10, 2024 10:28 IST
    10-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விரும்புபவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

    10-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விரும்புபவர்கள் நாளை (மே 11) முதல் விண்ணப்பிக்கலாம். மறு கூட்டல் / மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க விரும்பும்‌ பள்ளி மாணவர்கள்‌ மே 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  மறு தேர்வு ஜூலை 2-ம் தேதி நடைபெறுகிறது. 



  • May 10, 2024 10:15 IST
    தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 92.45% பேர் தேர்ச்சி

    தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 92.45% பேர் தேர்ச்சி .10-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 13,510 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 12,491 தேர்ச்சி பெற்றுள்ளனர்.



  • May 10, 2024 10:10 IST
    தமிழ்நாட்டில் 87.69% சிறைவாசிகள் தேர்ச்சி

    தமிழ்நாட்டில் 87.69% சிறைவாசிகள் தேர்ச்சி 260 சிறைவாசிகள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய நிலையில் 228 பேர் தேர்ச்சி. 



  • May 10, 2024 09:57 IST
    தேர்ச்சி சதவிகிதம் : முதல் 3 இடங்களை பிடித்த மாவட்டங்கள்

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.31% பேர் தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம்; சிவகங்கையில் 97.02% மாணவர்கள் தேர்ச்சி பெற்று 2-ம் இடம்; ராமநாதபுரத்தில் 96.36% மாணவர்கள் தேர்ச்சி பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளது.



  • May 10, 2024 09:51 IST
    பாடவாரியாக 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை

    1.தமிழ் - 8

    2.ஆங்கிலம் - 415

    3. கணிதம் - 20,691

    4. அறிவியல் - 5,104

    5.சமூக அறிவியல் - 4,428 



  • May 10, 2024 09:50 IST
    பாட தேர்ச்சி சதவிகிதம்

    தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம் - 96.85% , ஆங்கிலம் - 99.15% ,  கணிதம் - 96.78% ,  அறிவியல் - 96.72% 5. சமூக அறிவியல் - 95.74



  • May 10, 2024 09:47 IST
    1,364 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில் 1,364 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன; மொத்தம் 4,105 பள்ளிகள் இந்த தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளன



  • May 10, 2024 09:46 IST
    மாணவர்களை விட மாணவியர் 5.95 % அதிகம் தேர்ச்சி

    தேர்ச்சி பெற்றவர்கள் - 8,18,743 (91.55%) மாணவியர் - 4,22,591 (94.53 %) தேர்ச்சி மாணவர்கள் - 3,96,152 (88.58%) தேர்ச்சி இந்தாண்டு மாணவர்களை விட மாணவியர் 5.95 % அதிகம் தேர்ச்சி



  • May 10, 2024 09:40 IST
    மாணவிகள் 94.53 % பேர் தேர்ச்சி : மாணவர்கள் 88.50 % தேர்ச்சி

    மாணவிகள் 94.53 % பேர் தேர்ச்சி : மாணவர்கள் 88.50 % தேர்ச்சி:  மொத்தம் 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



  • May 10, 2024 09:38 IST
    8,18,743 மாணவர்கள் தேர்ச்சி

    தமிழ்நாடு முழுவதும் 9.03 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி.  பெற்றுள்ளனர். 



  • May 10, 2024 09:34 IST
    91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

     10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே10) காலை 9.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.  இதில் மொத்தம் 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



  • May 10, 2024 09:33 IST
    10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

    https://tnresults.nic.in/ : 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. உங்கள் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.  



  • May 10, 2024 09:23 IST
    இன்னும் 10 நிமிடத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது

    இன்னும் 10 நிமிடத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. மாணவர்கள் - dge.tn.gov.in/result.html
    - tnresults.nic.in - dge1.tn.nic.in, இந்த இணையதளத்தில் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். 



  • May 10, 2024 09:10 IST
    கவலை வேண்டாம்: தோல்வி தான் வெற்றிக்கு முதல்படி : சமூக ஆர்வலர்கள் கருத்து 

    இன்று தேர்வில் தேர்ச்சியடையாமல், குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். வாழ்வில் எப்போதும் முயற்சியை கைவிட வேண்டாம் என்றும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  - சமூக ஆர்வலர்கள் கருத்து 



  • May 10, 2024 08:57 IST
    10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : மதிப்பெண் பட்டியல் டவுன்லோட் எப்படி?

    முதலில் நாம் குறிப்பிட்ட இணையதளத்திற்கு செல்ல வேண்டும். ரோல் நம்பர் – பிறந்த தேதியை நாம் பதிவு செய்ய வேண்டும். நமது மதிப்பெண்கள் கணினியில் தெரிந்த பின்பு நாம் download the results என்ற ஆப்ஷனை பிரஸ் செய்ய வேண்டும். இது டவுண்லோண்ட் போல்டரில் தரவிறக்கப்படும். அதை நாம் வேண்டும் பெயரில் சேவ் செய்து கொள்ளலாம். 



  • May 10, 2024 08:45 IST
    ரிசல்ட் பார்க்க இந்த இணையதளங்களில் செல்லலாம்

    - dge.tn.gov.in/result.html
    - tnresults.nic.in
    - dge1.tn.nic.in 



  • May 10, 2024 08:44 IST
    ரிசல்ட் பார்க்க இதை முதலில் ரெடியா வையுங்க

    ரோல் நம்பர், பிறந்த நாள், செக்யூரிட்டி கேப்ட்சா: இவையெல்லாம் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள முக்கியமான ஒன்று.



  • May 10, 2024 08:12 IST
    கடந்த ஆண்டு டாப் 5 பாடங்களின் தேர்ச்சி சதவீதம்

    தமிழ்- 95.55%

    ஆங்கிலம் - 98.93%

    கணிதம் - 95.54%

    அறிவியல் - 95.75%

    சமூக அறிவியல் - 95.83%



  • May 10, 2024 08:04 IST
    கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: தமிழக அரசு உத்தரவு

    வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையில், கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். இந்த உத்தரவுகள் மாநிலம் முழுவதும் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களை தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறையில் அனைத்து விதமான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்றும், வெப்பம் மற்றும் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

     



  • May 10, 2024 07:59 IST
    கடந்த ஆண்டு எத்தனை மாணவர்கள், எந்தெந்த பாடங்களில் 100/100 மதிப்பெண் பெற்றனர்?

    கடந்த ஆண்டு தேர்வு முடிவுகள்: ஆங்கிலத்தில் 89  பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 320 பேரும், சைன்ஸ் பாடத்தில் 3, 584 பேரும், கணித பாடத்தில் 3,649 பேரும் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.



  • May 10, 2024 07:51 IST
    கடந்த ஆண்டு முடிவுகள்: தமிழ் பாடத்தில் 100/100 யாரும் பெறவில்லை

    கடந்த ஆண்டு தமிழ் பாடத்தில் யாரும் 100 %- முழு மதிப்பெண் பெறவில்லை.



  • May 10, 2024 07:36 IST
    குறுஞ்செய்தி வழியாக, தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்

    மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக, தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.



  • May 10, 2024 07:08 IST
    பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு: 13ம் தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள்

    பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, 13ம் தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள்.  சனிக்கிழமை தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. 



  • May 10, 2024 07:02 IST
    இன்று வெளியாகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

    இன்று வெளியாகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் . தேர்வு முடிவுகளை அறிய இந்த இணையதளத்திற்கு செல்லவும்: tnresults.nic.in, dge.tn.gov.in



  • May 09, 2024 20:10 IST
    2023ல் சிறப்பாகச் செயல்பட்ட டாப் 5 மாவட்டங்கள்

    பெரம்பலூர் - 97.67%

    சிவகங்கை - 97.53%

    விருதுநகர் - 96.22%

    கன்னியாகுமரி - 95.99%

    தூத்துக்குடி - 95.58%



  • May 09, 2024 19:14 IST
    10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளங்கள்

    10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்வதற்கான இணையதளங்களின் பட்டியல் இங்கே:

    dge.tn.gov.in/result.html

    tnresults.nic.in

    dge1.tn.nic.in



  • May 09, 2024 18:53 IST
    10-ம் வகுப்பு மதிப்பெண்களை ஆன்லைனில் தெரிந்துக் கொள்வது எப்படி?

    10 ஆம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகளைப் பார்க்க, மாணவர்கள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான - tnresults.nic.in-ஐப் பார்வையிட வேண்டும். பின்னர் முகப்புப் பக்கத்தில் கிடைக்கும் '10 ஆம் வகுப்பு SSLC முடிவு 2024'க்கான இணைப்பைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு, மாணவர்கள் தங்களின் மதிப்பெண் அட்டையைப் பார்க்க, அவர்களின் தேர்வுப் பட்டியல் எண் அல்லது பதிவு எண், பிறந்த தேதி (DOB) மற்றும் கேப்ட்சா ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.



Sslc Exam Result
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment