10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் விழுப்புரம் மாவட்டம் 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடலூர் விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு பெண்களே அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே10) காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 91.39% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் சற்ற அதிகரித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவிகள் - 94.53 சதவிகிதம் மாணவர்கள் 88.58 சதவிகிதம் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் முந்தி உள்ளனர். மாநில அளவில் விழுப்புரம் மாவட்டம் 94.11% தேர்ச்சி பெற்றுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கடந்த ஆண்டு 90.57% சதவீதம் பெற்று 24 வது இடத்தில் இருந்தது, இந்த ஆண்டு 94.11% எடுத்து 10வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
விழுப்புரம் அரசுப் பள்ளி அளவில் 93.51 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன், விழுப்புரம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“