/indian-express-tamil/media/media_files/uekUhCzqDBJ1zbQiDqNz.jpg)
தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் இன்று (ஜூலை 30) எஸ்.எஸ்.எல்.சி துணைத்தேர்வு முடிவுகளை பிற்பகல் 2 மணிக்கு வெளியிட்டது. tnresults.nic.in, dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் துணை தேர்வு மதிப்பெண்களை தெரிந்துக் கொள்ளலாம்.
10 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூலை 2 ஆம் தேதி முதல் ஜூலை 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தநிலையில், இன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு மதிப்பெண்களை தெரிந்துக் கொள்வது எப்படி?
படி 1: தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் - tnresults.nic.in
படி 2: முகப்புப்பக்கத்தில் கிடைக்கும் ‘10 ஆம் வகுப்பு SSLC முடிவு 2024’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்
படி 3: உள்நுழைவு சாளரத்தில், தேர்வு எண் அல்லது பதிவு எண், பிறந்த தேதி (DOB) மற்றும் கொடுக்கப்பட்ட பட உரையை (கேப்ட்சா) உள்ளிடவும்.
படி 4: சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது திரையில் உங்கள் மதிப்பெண் பட்டியல் காண்பிக்கப்படும்.
படி 5: பதிவிறக்கம் செய்து எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
இந்த ஆண்டு, 10 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 26 அன்று முதல் ஏப்ரல் 8 வரை நடைபெற்றது. இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 91.55 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டின் 91.39 சதவீதத்திலிருந்து ஒரு சிறிய அதிகரிப்பு ஆகும் மற்றும் 2022 இல் தேர்ச்சி 90.07 சதவீதமாகும். இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட மாவட்டமாக அரியலூர் மாவட்டமும், அதைத் தொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் இரண்டும் மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.
மொத்தம் 260 சிறை கைதிகள் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதினர், அவர்களில் 228 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு சிறை கைதிகளின் தேர்ச்சி சதவீதம் 87.69. கடந்த ஆண்டு 42.42 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இம்முறை, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் இலவசமாக தெரிந்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.