தமிழ்நாடு அரசுப் பள்ளியின் கணித ஆசிரியர் தமிழ்ச்செல்வனின் யூடியூப் வீடியோக்கள் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
கணிதத்தில் பல்வேறு சந்தேகங்களுடன் சிக்கித்தவிக்கும் மாணவர்கள், தமிழ்ச்செல்வனின் யூடியூப் வீடியோக்களில் விடைகளை எளிதாக புரிந்துகொள்கின்றனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “கணிதத்தில் முதுகலை படிப்பு முடித்துள்ளேன். தற்போது, காளப்பட்டி அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றுகிறேன். பள்ளி நேரம் முடிந்ததும், யூடியூப் வீடியோக்களில் தமிழ் மொழியில் கணிதத்தை எளிதாக புரியும் வகையில் கற்பித்து வருகிறேன்
முன்னதாக, லாக்டவுன் காலத்தில் ஆன்லைனில் கணித கருத்துகளை மாணவர்களுக்கு விளக்குவது கடினமாக இருந்தது. ஆனால், யூடியூப்பில் வீடியோக்கள் பதிவேற்றத் தொடங்கியபிறகு விஷயங்கள் எளிதாகிவிட்டன” என்றார்.
காளப்பட்டி பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவி சுகன்யா கூறுகையில், “யூடியூப் வீடியோக்கள் அருமையாக இருக்கும். தமிழ் மொழியில், கணிதத்தை தமிழ்செல்வர் சார் விரிவாக விளக்கியிருப்பார். திருப்புதல் தேர்வில் கணித பாடத்தில் 92 சதவீத மார்க் எடுத்தேன்” என்றார்.

மேலும் பேசிய ஆசிரியர், “எனது சேனலுக்கு 13 ஆயிரம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். அனைத்து பள்ளி மாணவர்களும் வீடியோ பார்த்து கணிதம் கற்கின்றனர். இதை சேவையாக தான் செய்துகொண்டிருக்கிறேன். பணம் சம்பாதிக்கும் நோக்கித்தில் செய்யவில்லை.
300க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவேற்றியுள்ளேன். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் 1150-க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து, மாநிலம் முழுவதும் அதிகமான மாணவர்களைச் சென்றடைய முயற்சி செய்வேன்” என்றார். இதுவரை அவரது வீடியோக்களுக்கு வரும் வியூஸை பணமாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வித் துறையின் மூத்த அதிகாரி கே.ஆர்.கண்ணன் கூறுகையில், “கணிதத்தை தமிழ் மொழியில் விளக்கி, மாணவர்களுக்கு எளிதாக கருத்துகளை புரியவைக்கும் தமிழ்செல்வின் முயற்சி சிறப்பானது. அவரது சேனலுக்கு 13 ஆயிரம் சப்ஸ்கிரைபர்ஸ் இருப்பது, சேனலுக்கு மாணவர்களிடையே இருக்கும் வரவேற்பை காட்டுகிறது. மற்ற பாட ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு எளிதாக விளக்குவதற்கான முயற்சியை மேற்கொள்ள கல்வி துறை ஆதரவளிக்கும்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil