TN TET Results 2019: : ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் முதல் மற்றும் இரண்டாம் தாளின் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. அந்த தேர்வுகளில் மிகவும் குறைந்த அளவிலான ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு இரண்டாம் தாளுக்கான ஸ்கோர் கார்டினை வெளியிட்டது தமிழக அரசு. இந்த ஸ்கோர் கார்டினை நீங்கள் டி.ஆர்.பி. -யின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.trb.tn.nic.in-ல் இருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த தேர்வு எழுதியவர்கள் தங்களின் ஐடி அல்லது பிறந்த தேதியைக் கொண்டு தங்களின் ஸ்கோர் கார்டினை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
TN TET Paper 2 score card - ஸ்கோர் கார்ட் டவுன்லோடு செய்வது எப்படி?
http://www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்திற்கு செல்லவும்
உங்களின் யூசர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டினை பயன்படுத்தி லாகின் செய்யவும்
டேஷ்போர்டினை க்ளிக் செய்யவும்
அங்கு க்ளிக் ஹியர் டூ டவுன்லோட் என்ற ஆப்சன் இருக்கும். அதனை க்ளிக் செய்து நீங்கள் உங்களின் ஸ்கோர் கார்டினை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
ஒரு வேளை நீங்கள் உங்களின் யூசர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டினை மறந்திருந்தால்?
ஃபர்கெட் யூசர் ஐடி என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்
நீங்கள் தேர்வுக்கு பதிவு செய்த போது கொடுத்த மின்னஞ்சல் முகவரியை உள்ளீடாக தரவும்
உங்களின் யூசர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்ட் உங்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டிருக்கும். அதில் இருந்து நீங்கள் லாகின் செய்து உங்கள் ஸ்கோர் கார்டினை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க : TNTET exam results 2019: குறைந்த மதிப்பெண்கள், தேர்வர்கள் ஷாக்