TNTRB Releases TNTET Paper 2 Result 2019: தமிழகத்தில் நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இரண்டாம் தாள் முடிவுகளை தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஜூன் 9, 2019-ல் நடந்த இத்தேர்வை 3,79,733 பேர் எழுதியிருந்தனர். இதில் சுமார் 350 பேர் மட்டுமே தேர்வாகியிருக்கிறார்கள். இதற்கிடையே TNTET-ன் முதல் தாள் முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தன. இந்த முதல் மற்றும் இரண்டாம் தாளின் முடிவுகள் TNTRB-ன், trb.tn.nic.in. இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதோடு இந்தத் தேர்வுக்கான விடைத்தாள்கள் ஜூலை 9-ம் தேதி வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
TNTET Result 2019: TNTET Paper 2 Result 2019
தமிழக பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வை ( Teacher Eligibilty Test(TET)) க்ளியர் செய்திருக்க வேண்டும். இந்தாண்டிற்கான டெட் தேர்வு விண்ணப்ப பதிவு, ஆன்லைன் முறையில் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெற்றிருந்தது.
TNTET Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு முதல்தாள் முடிவு அறிவிப்பு, கவுன்சலிங் எப்போது?
”TNTET தேர்வின் ஓ.எம்.ஆர் விடைத்தாள்கள் வல்லுநர்களால் நன்கு ஆராயப்பட்டு, தற்போது அதன் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. TNTET Paper-II - 2019-க்கான புரவினஷல் மதிப்பெண் பட்டியலும் இங்கே வெளியிடப்பட்டுள்ளது” என தமிழக ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
”விண்ணப்பதாரர்களின் OMR விடைத்தாள்களை கணினிமயமாக்கப்பட்ட ஸ்கேனிங்கின் போது, OMR தாள்களில் பொருத்தமான விடையளிப்பதற்கு ஷேட் செய்வதில் நிறைய பேர் தவறு செய்திருப்பது கண்டறியப்பட்டது. விடையைக் குறிக்கும் போது, வினாவின் சீரியல் எண்ணை குறிப்பிடாத விண்ணப்பதாரர்கள், சரியான விடையை அளித்திருந்தாலும் கூட, அது நிராகரிக்கப்படும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.