Trb-exam | ramanathapuram: தமிழகத்தில் நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வினை எளிதில் எதிர்கொள்ளும் வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமும், விருப்பமும் உள்ள வேலைநாடுநர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்டஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது பின்வருமாறு:-
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியம் (TRB) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் தேர்வுசெய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க பி.எட்., தேர்ச்சியுடன் ஆசிரியர்களுக்கான தகுதிதேர்வு - II இல்; (TNTET PAPER - II) தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் 30.11.2023-க்குள் ஆன்லைன் வழி விண்ணப்பிக்க வேண்டும் எனவும், இதற்கான தேர்வு 07.01.2024 அன்று நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு https://www.trb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.
இப்போட்டித் தேர்வினை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த வேலைவநாடுநர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையில், இத்தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 18.11.2023 (சனிக்கிழமை) அன்று முதல் துவக்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமும் விருப்பமும் உள்ள வேலைநாடுநர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசிஎண் 04567-230160 அல்லது 7867080168 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“