TN TRB Polytechnic Lecturer Vacancy for 1060 Posts: தமிழ்நாடு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் (டி.என்.ஆர்.ஆர்.பி) தமிழக கல்வி சேவையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு நிறுவனங்களில் (பொறியியல் / பொறியியல் அல்லாத) 1060 விரிவுரையாளர் காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து நேரடி ஆட்சேர்ப்புக்கான புதிய ஆன்லைன் விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 8, 2019 ஆம் தேதி, எஸ்.எல்.பி (சி) எண். 14206-14217 -ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
Advertisment
பதிவு செய்தல், விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும். அதே போன்று தேர்வு தேதியும், சான்றிதழ் சரிபார்ப்பு தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்.
வானத்தை தொட்ட வெங்காய விலை.. கவலையில் மக்கள்!
Advertisment
Advertisements
ஜூலை 1, 2019 நிலவரப்படி விண்ணப்பதாரர்கள் 57 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. பொறியியல் பாடங்களில் விரிவுரையாளராக பணியாற்ற, பொறியியல் / தொழில்நுட்பம் அல்லது அதற்கு பொருத்தமான இளங்கலை படிப்பில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
தர்பாரின் 'Chummakizhi' பாடல் ரஜினி ரசிகர்களை கவர்ந்ததா ?
எப்படி அப்ளை செய்வது?
ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரிய இணையதளமான trb.tn.nic.in -ல் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.300, மற்றவர்களுக்கு ரூ.600. விண்ணப்பதாரர்கள் இரண்டு நிலைகளில் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி அடிப்படையிலான தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பின் போது வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண் ஆகிவற்றை வைத்து விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.