தமிழ்நாடு அரசில் 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.11.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் (Tamilnadu Board of Rural Developement) உதவியாளர், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
Senior Scientist and Head
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Doctoral degree in Agriculture முடித்திருக்க வேண்டும். மேலும் 8 வருட பணி அனுபவம் வேண்டும்.
வயது தகுதி: 47 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Subject Matter Specialist (Horticulture)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : Master’s degree in Horticulture முடித்திருக்க வேண்டும்.
வயது தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Programme Assistant (Lab Technician)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : Bachelor’s degree in Agriculture முடித்திருக்க வேண்டும்.
வயது தகுதி: 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது தகுதி: 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Stenographer
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.
வயது தகுதி: 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு தளர்வு: அரசு விதிகளின்படி எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – http://tnbrdngo.org/events/NOTI012022TNBRD.pdf என்ற இணையதள பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: THE PRESIDENT, TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, Post Box No. 8811, T. Nagar, Chennai – 600 017, Tamil Nadu
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.11.2022
விண்ணப்பக் கட்டணம்: Senior Scientist & Head and Subject Matter Specialist (Horticulture) பதவிகளுக்கு ரூ. 500
Programme Assistant (Lab Technician), Assistant and Stenographer பதவிகளுக்கு ரூ. 300
இருப்பினும் எஸ்.சி/ எஸ்/டி பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://tnbrdngo.org/events/NOTI012022TNBRD.pdf என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.