தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பட்டியல் எழுத்தர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 160 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.05.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின், ராணிப்பேட்டை மண்டலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப, தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பதவிகளுக்கு சம்பந்தபட்ட மண்டலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இதையும் படியுங்கள்: தமிழகத்தில் 10000 ஆசிரியர்கள் நியமனம்: போட்டித் தேர்வு சிலபஸ் அறிவிப்பு எப்போது?
பட்டியல் எழுத்தர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 80
கல்வித் தகுதி : இளங்கலை அறிவியல், விவசாயம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : அதிகப்பட்ச வயது OC -32, MBC/ BC/ BCM/ MBC (V) – 34, SC/SCA/ST – 37
சம்பளம் : ரூ. 5,285 + 3,499
காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 80
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : அதிகப்பட்ச வயது OC -32, MBC/ BC/ BCM/ MBC (V) – 34, SC/SCA/ST – 37
சம்பளம் : ரூ. 5,218 + 3,499
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ராணிப்பேட்டை மண்டல அலுவலகத்தில் கிடைக்கக் கூடிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளை இணைத்து பெரம்பலூர் மண்டல அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
முகவரி: முதுநிலைமண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நான்காவது A Block, ராணிப்பேட்டை மாவட்டம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.05.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பை பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil