தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 591 பணியிடங்கள்; 8 முதல் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

TNCSC Trichy, Tuticorin invites application for various posts: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வேலைவாய்ப்பு; 591 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 591 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின், தூத்துக்குடி மற்றும் திருச்சி மண்டலங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப, தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பதவிகளுக்கு சம்பந்தபட்ட மண்டலங்களைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

பதவியின் பெயர் : பட்டியல் எழுத்தர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 204 (தூத்துக்குடி – 150, திருச்சி – 54)

கல்வித் தகுதி : பி.எஸ்.சி (இளங்கலை அறிவியல்)

வயதுத் தகுதி : அதிகப்பட்ச வயது SC/SCA/ST – 37, MBC/BC/BCM/MBC (V) – 34, OC -32

சம்பளம் : ரூ. 2,410 + 4,049

பதவியின் பெயர் : உதவுபவர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 202 (தூத்துக்குடி – 150, திருச்சி – 52)

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : அதிகப்பட்ச வயது SC/SCA/ST – 37, MBC/BC/BCM/MBC (V) – 34, OC -32

சம்பளம் : ரூ. 2,359 + 4,049

பதவியின் பெயர் : காவலர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 185 (தூத்துக்குடி – 150, திருச்சி – 35)

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : அதிகப்பட்ச வயது SC/SCA/ST – 37, MBC/BC/BCM/MBC (V) – 34, OC -32

சம்பளம் : ரூ. 2,359 + 4,049

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் சுய விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளை இணைத்து அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:                        

தூத்துக்குடி : மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், C 42, 43 & 44, சிப்காட் காம்ப்ளக்ஸ், மீளவிட்டான், மடத்தூர் (அஞ்சல்), தூத்துக்குடி -8

திருச்சி: மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், நீதிமன்ற வளாகம், திருச்சிராப்பள்ளி – 620001

விண்ணப்பிக்க கடைசி தேதி:

தூத்துக்குடி : 04.12.2021

திருச்சி : 30.11.2021

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tncsc trichy tuticorin invites application for various posts

Next Story
TNPSC Recruitment 2018: தமிழ்நாடு சிறைத்துறையில் வேலை.. விருப்பமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம்!NPCIL Recruitment 2019
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com