Advertisment

பாலிடெக்னிக் டிப்ளமோ ரிசல்ட் வெளியீடு; செக் செய்வது எப்படி?

பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு; தெரிந்துக் கொள்வது எப்படி என்பது இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tndte diploma results

தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (DoTE), பாலிடெக்னிக் டிப்ளமோ (TNDTE) படிப்புகளின் அக்டோபர் அமர்வுத் தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான- dte.tn.gov.in இல் முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: TNDTE Diploma Result 2025: Declared at dte.tn.gov.in; steps to check

தேர்வு எழுதிய மாணவர்கள் டிப்ளமோ தேர்வு முடிவுகளின் செயல்படுத்தப்பட்ட இணைப்பில் தங்கள் பதிவு எண்ணைச் சமர்ப்பித்து முடிவுகளைச் சரிபார்க்க வேண்டும்.

டிப்ளமோ செய்முறைத் தேர்வுகள் அக்டோபர் 7 முதல் நவம்பர் 7 வரையிலும், எழுத்துத் தேர்வுகள் அக்டோபர் 21 முதல் அக்டோபர் 26 வரையிலும் நடைபெற்றன.

Advertisment
Advertisement

டிப்ளமோ தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்வது எப்படி?

படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் – dte.tn.gov.in

படி 2: முடிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்

படி 3: தேவையான சான்றுகளை உள்ளிடவும்

படி 4: பதிவிறக்கம் செய்து, குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்

இந்த மாநில அளவிலான தேர்வுகள் சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மற்றும் டெக்ஸ்டைல் டெக்னாலஜி போன்ற பல்வேறு தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி படிப்புகளுக்கு நடத்தப்படுகின்றன.

மாணவர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியலில் ஏதேனும் முரண்பாடுகளைக் கண்டால், அவர்கள் படித்த நிறுவனங்களையோ அல்லது தொழில்நுட்ப கல்வி இயக்குனரக உதவி எண்ணையோ தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாணவர்ர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வு முடிவுகளில் திருப்தியடையாதவர்கள், தங்கள் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வதற்கும் மறு சரிபார்ப்பதற்கும் விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு செய்வதற்கான நடைமுறை அதிகார்ப்பூர்வ இணையதளத்தில் உள்ளது.

Exam Result
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment