TNEA 2019: தமிழக மாணவர்களின் இளங்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதி மற்றும் நேரத்தை இன்று அறிவித்தது அண்ணா பல்கலைக் கழகம். தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் ஜூன் 17ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான பொறியியல் படிப்பு கலந்தாய்வு ஜூன் 20-ம் தேதியும், பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 3 முதல் 28-ம் தேதி வரையும் நடைபெறும் என கூறப்பட்டிருக்கிறது.
2019-2020 ஆம் ஆண்டு பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் கட்டாயம் TNEA 2019-க்கு அப்ளை செய்திருக்க வேண்டும். முதுகலை பயில விரும்புபவர்களுக்கு TANCET 2019 தேர்வினை நடைமுறையில் வைத்திருக்கிறது அண்ணா பல்கலைக் கழகம்.
TNEA 2019
2018-ல் மொத்தம் 563 கல்லூரிகள் TNEA 2019-வில் பங்கேற்றிருந்தன. இதன் மூலம் பி.இ மற்றும் பி.டெக் மாணவர்கள் அட்மிஷன் பெற முடியும்.
TNEA 2019 அறிவிப்பு - ஏப்ரல் 4-ம் வாரத்தில்
ஆன்லைன் முன்பதிவு - மே முதல் வாரத்தில்
விண்ப்பத்தை சமர்ப்பிக்க - ஜூன் முதல் வாரத்தில்
உறுதியாவது - ஜூலை முதல் வாரம்.
தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் ஜூன் 17ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான பொறியியல் படிப்பு கலந்தாய்வு ஜூன் 20-ம் தேதியும், பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 3 முதல் 28-ம் தேதி வரையும் நடைபெறும் என கூறப்பட்டிருக்கிறது.
பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை, கடந்த ஆண்டு கட்டணமே வசூலிக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் கூறினார்.