தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான நான்கு கட்ட கலந்தாய்வு செயல்முறைகள் நிறைவடைந்த நிலையில், 56. 1 சதவீத இடங்கள் நிரப்பபடாமல் உள்ளன.
தமிழகத்தில், 458 கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 836 இடங்கள் பொதுப்பிரிவு கலந்தாய்வு கடந்த அக்டோபர் 8ம் தேதி தொடங்கியது. இம்மாதம் 28-ஆம் தேதிவரை, நான்கு கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற்றது. நான்காம் கட்ட கலந்தாய்வு முடிவுற்ற நிலையில், 69,752 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.
சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில்,
விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 500 இடங்களில் 277 இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்ட 150 இடங்களில் 122 இடங்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் ஒதுக்கப்பட்ட ஆறாயிரத்து 755 இடங்களில் கணிசமான இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
எனவே, 1,63,154 என்ற மொத்த எண்ணிக்கையில்,வெறும் 71,195 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அதவாது, 43. 6 சதவீத விழுக்காடு.
இம்முறை, 12 அரசு – அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் ஒரு தனியார் கல்லூரியில் உள்ள இடங்கள் அனைத்தும் காலியாகின. அதே நேரத்தில், 20 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை பூஜ்யமாக உள்ளது. கடந்த, ஆண்டு நடைபெற்ற கலந்தாயவில் 16 கல்லூரிகளில் ஒருவர்கூட சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை 100க்கும் குறைவாக உள்ளன. மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள தனியார் கல்லூரிகள் மிகபெரிய நிதிநெருக்கடிக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தரமான கல்வி கிடைக்க வகை செய்ய முடியாது என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பொறியியல் கலந்தாயவில் 89,000 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. மேலும், தமிழகத்தில் செயல்படும் 92 தனியார் பொறியியல் போதுமான கட்டமைப்பு இல்லாத காரணத்தால், மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பெயர் குறிப்பிட விரும்பாத உயர் கல்வித்துறையின் மூத்த அதிகாரி கூறுகையில்,”30 பொறியியல் கல்லூரி நிறுவனங்கள், தங்கள் கல்லூரியை கலைக் கல்லூரியாக மாற்றுவதற்கான கோரிக்கைகளுடன் எங்களை அணுகினர் . ஏழு பொறியியல் கல்லூரிகள் உடனடியாக மூடுவதற்கான அனுமதி கேட்டு முறையாக கடிதம் எழுதியுள்ளனர். மேலும், தங்கள் மாணவர்களை மற்ற கல்லூரிகளுக்கு மாற்றுவதற்கான அரசாங்கத்தின் உதவியையும் கோரியுள்ளனர். பன்னிரெண்டு பொறியியல் கல்லூரிகள் அடுத்த கல்வியாண்டு முதல் அட்மிஷனை நிறுத்தவதாகவும், அடுத்த மூன்றாண்டுகளில் மூடப்படுவதற்கான அனுமதி கோரியுள்ளனர்,”என்று கூறினார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook
Web Title:Tnea 2020 news tnea vacant seats government colleges
காங்கிரசை முன்கூட்டியே ‘கவனிக்கும்’ திமுக: மற்ற கூட்டணிக் கட்சிகள்?
அர்ச்சனா வீட்டுல விசேஷம்… குவிந்த டிவி பிரபலங்கள்: என்னா ஆட்டம்?
தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 6 பேர் உடல் கருகி பலி
ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா: 227 ரன்கள் குவித்து சாதனை